Table of Contents
பாதாம் மில்க் ரெடிமேட் மிக்ஸ் தொழில் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.
நாம் பலரும் அன்றாட வாழ்வில் அதிகமாக டீ, காபி மற்றும் பால் போன்றவற்றை குடிப்பது வழக்கமான ஒன்றாகும். இதில் சிலர் இதனுடன் ஊட்டச்சத்து தரும் பவுடர்களை கலந்து குடிப்பது வழக்கமாக வைத்துள்ளனர்.
ஆனால் இந்த பவுடர்களை, தயாரிக்கும் சில தனியார் நிறுவனங்கள் அதிகப்படியான விலைகளில் கடைகள் மற்றும் ஆன்லைனில் விற்று வருகின்றனர். இது மட்டும் இல்லாமல் நீண்ட நாட்கள் பவுடர் கெட்டுப்போகாமல் இருக்கவும், சுவையை அதிகரிக்கவும் பல ரசாயனப் பொருட்களை இதில் கலந்து விற்பனை செய்கின்றர்.
ரசாயனங்கள் பயன்படுத்துவதால் இதுபோன்ற பவுடர்களை பயன்படுத்துவோருக்கு போதிய அளவு ஆரோக்கியம் கிடைப்பதில்லை. கடைகளில் வாங்கும் ஹெல்த் மிக்ஸ் குடிப்பது கெடுதல் தான் ஆனால் இந்த பவுடரை நாம் சுத்தமான முறையில் மிகவும் சுகாதாரமாக வீட்டிலேயே தயாரித்து விற்றால் மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும். மேலும் இதன் மூலம் அதிகப்படியான இலாபம் ஈட்டமுடியும்.
தற்போது வாருங்கள் பாதாம் மிக்ஸ் தயாரிக்க என்னென்ன தேவை எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பாதாம் பருப்பு – 150 கிராம்
சர்க்கரை – 300 கிராம்
குங்குமப்பூ – 15 இதழ்கள்
பாதாம் எசென்ஸ் – 2 துளிகள்
செய்முறை விளக்கம்:
பாதாம்பருப்பை நன்றாக வெந்நீரில் ஊற வைத்து தோல் நீக்கி, நிழலில் காய வைத்து எடுத்துக் கொள்ளவும், பின்னர் வெறும் கடாயில் சூடுபட வறுத்து, அது ஆறியதும் மிக்ஸியில் போட்டு நன்றாக பொடியாக அரைத்துக் எடுத்து கொள்ள கொள்ளவும். அரைத்து எடுத்த பொடியுடன் சர்க்கரை, குங்குமப்பூ ஆகியவற்றை சேர்த்து பொடி செய்து கொள்ளவும். பிறகு, இந்த பவுடர் பொடியுடன், தேவைக்கேற்ப பாதாம் எசென்ஸ் விட்டு நன்கு கலந்து எடுத்து கொண்டால் பாதம் பவுடர் விற்பனைக்கு ரெடியாகி விடும். பின்பு இதனை நம் கம்பெனியின் பெயர் அச்சிடப்பட்ட தரமான பாக்கெட்டுகளிலோ அல்லது பாட்டில்களிலோ அடைத்து விற்பனைக்கு அனுப்பலாம்.
குறிப்பு: பாதாம் பருப்பை தோல் உரிக்காமல் குட, வெறும் கடாயில் சூடுபட வறுத்து ஆறியதும் மிக்ஸியில் பொடி செய்தால் ஊட்டச்சத்து இன்னும் கூடுதலாக கிடைக்கும்.
உபயோகிக்கும் முறை :
இந்த பாதாம் மிக்ஸ் பவுடரை தேவைப்படும்போது ஒரு கிளாஸ் சூடான பாலில், ஒரு ஸ்பூன் பாதாம் மிக்ஸ் பொடி கலந்து அருந்தலாம் அல்லது குளிர்ச்சி தேவைப்படுவோருக்கு பாலில் பாதாம் மிக்ஸை தேவையான அளவு கலந்து குளிர்சாதனப் பெட்டியில் குளிர வைத்தும் கொடுக்கலாம்.
விற்பனை செய்யும் முறைகள் :
இவ்வாறு தயார் செய்த பவுடரை சிறிய பாட்டில் அல்லது கவர்களில் அடைத்து அருகில் உள்ள உங்கள் நண்பர்கள் வீடுகளுக்கும், சிறிய பெரிய டீக்கடைகள் மற்றும் அழகுப் பொருட்கள் விற்கும் கடைகளுக்கும் விற்பனை செய்து இலாபம் பெறமுடியும்.
நீங்கள் தயாரிக்கும் பாதாம் மிக்ஸ் பவுடர் சுத்தமானதாகவும் சுகாதாரமாகவும் இருந்தால் உங்களிடம் ஒரு முறை வாங்கும் வாடிக்கையாளர் மீண்டும் மீண்டும் வாங்குவார்கள் அது மட்டுமல்லாது அவர்களது அருகாமையிலுள்ள நண்பர்களுக்கும் பரிந்துரை செய்வார்கள்.
நண்பர்களே இதுவரை பாதாம் மிக்ஸ் ரெடிமேட் பவுடர் தொழில் செய்வது எப்படி என்று மிகவும் தெளிவாக இந்த கட்டுரையில் கூறியுள்ளேன் தயவு செய்து நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் இதற்கு அதிக இடமும் அதிக முதலீடு தேவையில்லை குறைந்த முதலீட்டில் நீங்களும் ஒரு முதலாளியாக அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்தக் கட்டுரை பிடித்திருந்தால் பின்னூட்டம் வாயிலாக எங்களுக்கு ஊக்கத்தையும் ஆக்கத்தையும் தரவும் இதே போல் உங்கள் நண்பர்களும் தொழில் செய்ய விரும்பினால் அவர்களுக்கும் இந்த கட்டுரையை பகிரவும் மேலும் ஒரு நல்ல தொழில் சார்ந்த கட்டுரையில் உங்களை சந்திக்கிறேன் நன்றி.