நாம் இன்று பார்க்க இருப்பது குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய நன்னாரி சர்பத் தொழில்.
கோடை காலங்களில் அதிக வருமானம் தரக்கூடிய குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய தொழிலை பற்றி பார்க்கலாம் இதற்கு ஏற்ற தொழில் நன்னாரி சர்பத் தயாரிப்பது தான் இதற்கான முதலீடும் குறைவு அதிக அளவில் விற்பனை வாய்ப்பும் உள்ளது.
நன்னாரி சர்பத் தயாரிப்பு!
கோடைக்காலங்களில் வெயிலின் தாக்கத்தை ஒரு அளவிற்கு குறைக்க உதவும் குளிர்பானத்தில் சர்பத்தும் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி குடிப்பார்கள். இதனை தயார் செய்ய அதிக அளவு முதலீடு அதிக அளவு இடவசதியும் தேவையில்லை. இப்போது சர்பத் தயாரிக்கும் முறையைப் பற்றி விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்:
- நன்னாரி வேர்
- பாதாம் பிசின்
- எலுமிச்சை பழம்
- சர்க்கரை
- சிட்ரிக் ஆசிட்
- சோடியம் பென்சோயேட் – ஒரு சிட்டிகை அளவு
- தேன் – தேவையான அளவு
தயாரிக்கும் முறைகள்:
மேலே உள்ள அனைத்து பொருட்களையும் தயார் நிலையில் வைத்து கொள்ளுங்கள் முதலில் நன்னாரி வேரை நன்றாக கழுவி அது தண்ணீரில்; மூழ்கும் அளவிற்கு நீர் ஊற்றி ஒரு நாள் முழுவதும் ஊர வைக்க வேண்டும்.
பிறகு நீரை நன்றாக வடிகட்டி அதனுடன் தேவையான அளவு சர்க்கரை மற்றும் சிட்ரிக் ஆசிட்டை சேர்த்து மிதமாக சூடு படுத்த வேண்டும்.
சர்க்கரை அதில் நன்றாக கரைந்ததும் மெல்லிய துணியால் அதை வடிகட்டிக் எடுத்து கொள்ள வேண்டும். பிறகு அதில் தேவையான அளவு சோடியம் பென்சோயட் சேர்த்து கலக்கி ஈரப்பதம் இல்லாத உலர்வான பாட்டிலில் ஊற்றி வைக்க வேண்டும்.
ஒரு கரண்டி நன்னாரி சிரப்புக்கு மூன்று கரண்டி தண்ணீர் விட்டு பாதாம் பிசின், எலுமிச்சை சாறு, சிறிதளவு தேன் விட்டு நன்றாக கலக்கினால் நன்னாரி சர்பத் ரெடி இப்படியும் தயார் செய்து விற்பனை செய்யலாம். அல்லது நன்னாரி சர்பத்தை மட்டும் தனியாகவும் விற்பனை செய்யலாம்.
விற்பனை செய்யும் முறைகள்:
இவ்வாறு தயார் செய்யப்பட்ட பானத்தை குளிர்சாதன பெட்டியில் வைத்து அல்லது சிறு சிறு கடைகளில் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யலாம். கோடை காலங்களில் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கும் நீங்கள் தயாரிக்கும் நன்னாரி சர்பத் பானம் மிகவும் சுத்தமாகவும் சுவையாகவும் தயாரித்து நீங்கள் விற்றால் உங்களிடம் ரெகுலராக கடைக்காரர்கள் வாங்குவார்கள்.
இதற்கு அதிக இட தேவையில்லை குறைந்த இடத்திலேயே உங்கள் வீட்டிலேயே வைத்து வியாபாரம் செய்து நல்ல லாபம் பெறலாம் ஒரு முறை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் முயற்சி செய்திருந்தால் தவறாமல் பின்னூட்டத்தில் கமெண்டில் தெரியப்படுத்தவும்.
வீட்டில் இருந்து கொண்டு சுய தொழில்கள் செய்து அதிக லாபம் பெறுவது எப்படி என்பதை அறிந்து கொள்ள, நமது இணைய தளத்தை தொடர்ந்து பார்வையிடவும் இந்த கட்டுரை பிடித்திருந்தால் கமெண்ட் வாயிலாக எங்களுக்கு ஊக்கத்தை தரவும் மறக்காமல் தொழில் செய்ய நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கும் இந்த பதிவு பயனுள்ளதாக அமைய சமூக வலைதளங்களில் பகிரவும் நன்றி.