குறைத்த முதலீட்டில் தொழில் தொடங்க 5 எளிய வழிகள்

குறைத்த முதலீட்டில் தொழில் தொடங்க நினைப்பவரா நீங்கள் உங்களுக்கு தான் இந்த பதிவு வாருங்கள் பார்க்கலாம்.

ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு தோன்றலாம். அந்த எண்ணம் தோன்றியவுடன், முதலில் பணத்திற்கு என்ன செய்யப்போகிறோம் என்ற பயமும் கூடவே வரும். இந்த பயத்தை முன்னிட்டு தொழில் தொடங்காமல் ஒருவருக்கு கீழ்  சம்பளத்துக்கு வேலை செய்பவர்கள் இங்கு ஏராளம். விடாமுயற்சி இருந்தாள்  குறைந்த முதலீட்டில் தேர்ந்தெடுக்க பல தொழில்கள் உள்ளன.

குறைவான நேரமும், குறைவான உழைப்பும் இந்த தொழில்களுக்கு போதுமானவை. இத்தகைய தொழில்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.

உணவு தொழில்.

உணவு தொழில் குறைந்த முதலீட்டில் மேற்கொள்ளக்கூடிய ஓர் அருமையான தொழில். குறைந்த முதலீட்டில் டிப்பன் கடை வைத்து நல்ல வருமானம் பார்ப்போர் நமது நாட்டில் ஏராளம். கடை வைக்க போதிய பணம் இல்லாமல் தள்ளு வண்டி மற்றும் காரில்  உணவு விற்பனை நடத்தி தினமும் 1000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கவும் வாய்ப்பு இங்கு உள்ளது. கூலித்தொழிலாளர்கள் நடுத்தர மக்கள் ஏழை மக்கள், என அணைத்தது தரப்பினரும் பசிக்கும்போது அவர்கள் மனதில் தோன்றுவது  தள்ளு வண்டி உணவுக் கடைகள் தான். இந்த தொழிலில் எந்த ஒரு நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை என்பது மிகவும் முக்கியமான அம்சமாகும்.

பிரான்சைஸ் வாய்ப்பு.

அதிக அளவில் முதலீடு தேவைப்படாத இன்னொரு தொழில் பிரான்சைஸ் உரிமம் பெறுவது தான். ஒருவர் நடத்தும் நிறுவனத்தின் பெயரில் ஒரு கிளையை மற்றொருவர்  பெற்று நடத்துவதே பிரான்சைஸ் (FRANCHISE). அதிக ரிஸ்க் எடுக்காமல் சம்பாதிக்க பிரான்சைஸ் வாய்ப்பை பெற முயற்சிக்கலாம்.அதுவும் நல்ல நிறுவனத்தை நடுவது புத்திசாலி தானம்.

நிகழ்ச்சிக்கு திட்டமிடுபவர்.

நிகழ்ச்சிக்கு திட்டமிடுபவர் தொழில் EVENT PLANNER   அதிக அளவு லாபம் தரக்கூடியதாகும். இத்தொழிலுக்கு பணத்தை விட உங்களின் மூளைதான் முக்கிய முதலீடு. திருமணம் மற்றும் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு சரியாக திட்டம் தீட்டி சிறப்பாக நடத்துபவர் என்ற பெயரை நீங்கள் வாங்கி விட்டால் வாடிக்கையாளர்கள் வந்து குவிவதோடு நீங்கள் கேட்கும் பணத்தையும் தருவர் இதன் மூலம் நல்ல லாபம் இட்ட முடியும்

புகைப்படக் கலைஞர்.

புகைப்படம் எடுக்கும் திறன் இங்கு பலருக்கு இருக்கும். இந்த திறனை கொஞ்சம் மெருகேற்றி அழகிய உணர்வோடு சிந்தித்தால் சிறந்த புகைப்பட கலைஞர் ஆகி விடலாம். தொழில் ரீதியான கேமரா வாங்குவது மட்டும் தான் முதலீடு. சிறந்த கலை உணர்வோடு செயல்பட்டால் கூடுதல் வாடிக்கையாளர்கள் உங்களுக்கு கிடைப்பர்.இப்போது திருமணம் மட்டும் இல்லாமல் அணைத்து விசயசங்களுக்கும் புகைப்படம் எடுப்பது இயல்பாகி விட்டது

உள் அலங்கரிப்பு.

மேலும்,வெப் வடிவமைப்பு (வெப் டிசைனிங்),ரூம் அலங்காரம் (INTERIOR DECORATOR), பேக்கரி,சலூன் புகைப்பட நிலையம் போன்ற தொழில்களும் குறைந்த முதலீட்டில் மேற்கொள்ளக் கூடியவையே. இத்தொழில்களுக்கான முறையான பயிற்சி பெற்று, குறைந்த முதலீடு செய்து தொழில் செய்யலாம்.இப்போது நிறைய பயிற்சி வகுப்புகள் உள்ளன.

இந்த தொழில் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும் மீண்டும் இன்னொரு தொழில் பதிவில் சந்திக்கிறான் நன்றி.

Facebook Messenger Twitter WhatsApp

Leave a Comment

Exit mobile version