Site icon TAMIL BUSINESS THAGAVAL

கிளாஸ் பெயிண்டிங் மூலம் வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்

கிளாஸ் பெயிண்டிங் மூலம் வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் வாங்க.

இன்று நாம் பார்க்க இருக்கும் தொழில் என்னவென்றால் கிளாஸ் பெயிண்டிங் இதற்கு முதலீடு குறைவு உங்களது மூளையை மிகவும் மூலதனமாக அமையும் இன்று பெரும்பாலானவர்கள் வீட்டில் மிகவும் அழகான பொருட்களை வைத்துக்கொள்ள அனைவரும் ஆசைப்படுவார்கள்.

வீட்டில் அலங்காரப் பொருட்களில் மிகவும் பங்கு வகிப்பது கண்ணாடிகள் அதனால் கிளாஸ் பெயிண்டிங் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது இது அனைவரும் அறிந்த ஒன்றாகும் ஆதலால் இந்த தொழில் இல்லத்தரசிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

நீங்கள் புதிதாக தொழில் தொடங்க விரும்பினால் இந்தத் தொழில் மூலம் குறைந்த முதலீட்டில் அதிக வருமானத்தை ஈட்ட முடியும் உங்களது வீட்டுப் பணிகள் முடிந்து ஓய்வு நேரங்களில் கூட இந்த தொழிலை செய்யலாம்.

இந்த தொழில் செய்வதற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள் :

 

  1. கண்ணாடி

 

  1. வெள்ளை பேப்பர்

 

  1. கருப்பு நிற லைனர்

 

  1. கிளாஸ் கலர்ஸ்

 

  1. கிலிட்டர்ஸ்

தேவையான பொருட்கள் என்னவென்று பார்த்து விட்டோம் தற்போது எப்படி தயாரிக்கலாம் என்பதை விரிவாக பார்க்கலாம்

தயாரிப்பு முறை :

முதலில் ஒரு பேப்பரை எடுத்து அதில் கண்ணாடியின் அளவிற்கேற்றவாறு டிசைன்களை வரைய வேண்டும். வரைவது உங்களுக்கு கடினம் என்றால் தேவைக்கேற்ப போட்டோஷாப் மூலம் டிசைனை கணினியின் உதவியோடு வரைந்து நகலெடுத்துகொள்ளவும்.

அடுத்ததாக வரைந்து வைத்துள்ள அல்லது நகல் எடுத்து வைத்துள்ள டிசைன் பேப்பரை கண்ணாடியின் அடிப்பகுதியில் டேப் வைத்து ஒட்டிக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக கருப்பு நிற லைனரை கொண்டு  ஒட்டி வைத்துள்ள டிசைன் முழுவதிற்கும் பொறுமையாக டிசைன் மாறிவிடாமல் அவுட்லைன் கொடுக்க வேண்டும்.

அடுத்ததாக  கிளாஸ் கலரை பயன்படுத்தி சிறிய பிரஸ் மூலம் விருப்பமான வண்ணங்களில் கண்ணாடியை கலர் செய்து கொள்ளலாம். தேவைப்பட்டால்  கிலிட்டர்ஸ் பயன்படுத்தி  மேலும் உங்கள் டிசைனை மெருகேற்றி கொள்ளலாம்.

கலர் கொடுத்து மெருகேற்றிய டிசைன் முடித்தவுடன் கண்ணாடியை ஒரு நாள் முழுவதுமாக யாருடைய கை படாத இடத்தில் காய வைத்து கொள்ள வேண்டும்

இப்போது உங்கள் வேலை 90 சதவிகிதம் முடிந்துவிட்டது கண்ணாடி காய்ந்தவுடன் ஸ்டிக்கரை பிரித்துவிட்டு கண்ணாடி திருப்பி வைத்து தேவையான விதத்தில் ஃப்ரேம் செய்து விற்பனைக்கு அனுப்பலாம்.

தற்போது நம் தயாரித்த கிளாஸ் பெயிண்டிங் எப்படி எங்கெல்லாம் விற்பனை செய்யலாம் என்று மிக தெளிவாக பார்க்கலாம் வாருங்கள்.

விற்பனை முறைகள் :

தயாரான இந்த கிளாஸ் பெயிண்டிங்கை கடைகளுக்கு கொடுத்து விற்பனை செய்யலாம். அருகில் உள்ள வீடுகளுக்கும், நண்பர்களுக்கும் கூட தயாரித்து விற்பனை செய்யலாம். அல்லது முகநூல் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தங்களுக்கு என்று ஒரு பேஜ் உருவாக்கி அதன் மூலம் ஆர்டர் எடுத்து கூட நீங்கள் விற்பனை செய்யலாம்.

நீங்கள் குறித்த நேரத்தில் உங்கள் கஸ்டமர்களுக்கு பெயிண்டிங் செய்து டெலிவரி செய்தால் அவர்கள் அவர்கள் நண்பர்களுக்கும் உங்களை பரிந்துரை செய்வார்கள் இதன் மூலம் நல்ல லாபத்தை ஈட்ட முடியும் அது மட்டுமில்லாமல் உங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ளவும் முடியும்.

வீட்டில் இருந்து கொண்டு எப்படி சுய தொழில்கள் செய்து அதிக லாபம் பெறுவது எப்படி என்பதை உடனே அறிந்து கொள்ள நமது இணையதளத்தை சப்ஸ்கிரிபே செய்து தொடர்ந்து இணைந்திருங்கள்.

மேலும் உங்கள் நண்பர்கள் யாரேனும் தொழில் செய்ய விரும்பினால் அவர்களுக்கு எதுவும் கட்டுரை பயனுள்ளதாக இருக்கும் என்று உங்களுக்குத் தோன்றினால் தயவுசெய்து சமூக வலைதளங்களில் பகிரவும் மேலும் அவள் ஒரு தொழில் பதிவில் உங்களை சந்திக்கிறேன் நன்றி.

Exit mobile version