மரக்கறி வளர்ப்பு!!!!!
அதிகம் செலவிட வேண்டாம் குறைந்த பணம் போதும் ஒன்றல்ல இரண்டல்ல ஏராளமான காய்கறியை சுயமாக பெற்று சுய தொழில் பண்ணலாம் நீங்க எதிர்பார்த்த லாபம் பெறலாம்
👉மரக்கறி வளர்ப்பு அப்படின்னா ஒரு காய்கறியை மட்டும் வச்சு விவசாயம் பண்ணி சம்பாதிக்கிறது அல்ல நம்ம வீட்டுக்கு அருகில் குறிப்பிட்ட இடம் அமைத்து அதில் எவ்வளவு காய்கறிகள் அந்த மண்ணுல பிடிபடும் அந்தந்த காய்கறிகளை விளைவித்து அறுவடை பண்ணி அதுபோல் சம்பாதிக்க
👉இதற்குப் பெயர்தான் மரக்கறி வளர்ப்பு அப்படின்னு சொல்லி சொல்லுவாங்க அதை எப்படி அறுவடை பண்ணி அதை விற்பனை செய்கின்ற அதிக லாபம் பெறுவது என்பதை பார்க்கலாம்!!!!!
👉நிலம்
👉அலவாங்கு/மண்வெட்டி
👉கிளறி
👉நீர்
👉நீர் விடுதவதற்கான வசதி
👉விதைகள், செடிகள்
👉உரம்
👉மனித உழைப்பு
நிலத்தை பயன்படுத்துதல்:
👉 நீங்கள் பயிர் செய்வதற்கு நிலத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் பிறகு அதில் போய் வருவதற்கு இடத்தை விட்டுஇடத்தை சரி செய்து கொள்ளவும்
👉 பிறகு எத்தனை பார்ட்டிகள் போடலாம் என்பது தேர்வு செய்து கொள்ளுங்கள்
👉பாத்தியைச் சுற்றி கற்கலால் அல்லது வேறு பொருட்கலால் சிறு வரம்பு கட்டலாம். அலவாங்கு அல்லது மண்வெட்டி போன்றவற்றால் மண்ணை ஆழமாக (சுமார் 2-3 அடி) வெட்டி, கிண்டி, கிளறிப் பதப்படுத்தவும். 👉முதலாண்டே குப்பை அல்லது கலப்பு உரங்களைச் ஆழமாகத் தாட்டு விட்டால் அடுத்த ஆண்டு அவை மண்ணோடு கலந்து நல்ல பசளையாக அமையும். அப்படி நீங்கள் செய்யாவிடின் உரம் அல்லது பசளையை பெற்று மண்ணோடு கலந்து பதப்படுத்துங்கள்.
விதைகளை நடுதல்:
👉என்னென்ன பயிர்களை நடுவது என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள் அதிகம் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் கத்திரி வெண்டை அவரை இஞ்சி மல்லி தக்காளி முள்ளங்கி என பல வகைகளை பயிர் செய்யலாம்.
👉இந்த விதைகளை அல்லது செடிகளை எப்பொழுது எப்படிப் பயிரிடுவது என்பதும் முக்கியம். குளிர் நிலப்பகுதிகளில் உறைபனி முடிந்த பின்னரே பயிரிட வேண்டும். அதற்கு முன் வீட்டுக்குள் சில பயிர்களை வளர்க்கத் தொடங்கலாம்.
சில விதைகள் மேலே தூவி விடுதல் போதுமானது. சில விதைகள் மெதுவாக தாக்கப்பட வேண்டும். மேலும் சில சற்று ஆழமாக தாக்கப்பட வேண்டும். விதைக்கும் போதோ அல்லது செடிகளை நடும் போதோ போதிய இடம் விட்டு செய்ய வேண்டும். வெவ்வேறு தாவரங்களுக்கு வெவ்வேறு இடைவெளிகள் தேவைப்படலாம். நெருக்கமாக நட்டால் வேர்கள் பரவ இடமில்லாமலும், உரம் போதிய அளவு கிடைக்காமலும் வளர்ச்சி குன்றி உற்பத்தி பாதிப்படையும்.
தண்ணீர் விடுதல்:
👉நட்டு விட்ட பின்ன பயிர்களுக்குத் தேவையான தண்ணீர் விடுவது முக்கியமானதாகும். அதிகாலை செடிகள் வாடி இருந்தால் தண்ணீர் தேவைப்படுகிறது. தாவரங்களின் அடியில் நீர் விடுதல் நன்று.
👉இம் முறை நீர் வேர்களுக்குப் போவதை உறுதி செய்கிறது. இலைகளில் நீர் மிகுவாக விழும் போது நோய் வருவதற்காக வாய்ப்பு சற்றுக் கூடுகிறது.
தாவரங்கள் வளர்ந்து வரும் போதும், உற்பத்திக் காலத்தின் போதும் உரம் இடுதல் உற்பத்தியைக் கூட்டும். நீங்கள் கடையில் உரத்தை வாங்குவதானால் என்ன மாதிரிச் தாவரங்களுக்கு என்ன மாதிரி உரம் அவசியம் என்பதை அறிந்து செய்வது முக்கியம். இல்லாவிடின் பணம் வீணாவுதடன் பலனும் கிட்டாது. நெல், சோளன் போன்ற தானிய வகைகளுக்கு நைட்ரசன் கூடுதலாக உள்ள உரம் தேவை. பூக்கும், காய்க்கும் தக்காளி, மிளகாய், கத்தரி போன்ற செடிகளுக்கு பொசுபரசு கூடுதலாக உள்ள உரம் தேவை.
அறுவடை:
👉மிளகாய், தக்காளி, வெண்டி, கத்தரி போன்றவை சில மாதங்களுக்கு தொடர்ச்சியாக உங்களுக்கு அறுவடை தரக்கூடியவை. கீரைகளை நீங்கள் நுள்ளி எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள,
👉அவற்றின் இலைகள் மீண்டும் தளைக்கும். கிழங்குகளைப் பொதுவாக கடைசியாக ஒரு முறை அறுவடை செய்யலாம்.