சுயதொழில் செய்ய ஏற்ற தொழில் ….
லாபம் பெருகேடுத்து ஓடக்கூடிய தொழில் ஆடு வளர்ப்பு!!!!!!!!!
👉 வரப்பின் நன்மைகள்
👉 வளர்ப்பு முறை
👉 உணவு
👉 விற்பனை
செம்மறி ஆட்டின் நன்மைகள்:
- செம்மறி ஆட்டிலிருந்து இறைச்சி, கம்பளம், தோல், எரு மற்றும் பால் மூலம் வருவாய் கிடைக்கிறது.
- ஒரு செம்மறி ஆடு ஒரு ஆண்டிற்கு 500 முதல் 700 கிலோ எரு உற்பத்தி செய்கிறது.
- செம்மறி ஆடுகள் புல்லின் மேற்பகுதியை மட்டுமே மேய்வதால் மேய்ச்சல் தரைகள் அழிவதில்லை. மரங்களையும் இவை அழிப்பதில்லை.
- செம்மறியாடுகள் மந்தையாகவே நடமாடுவதால் பராமரிப்பு எளிது. 100 ஆட்டிற்கு 1 நபர் போதுமானது.
- அதிகச் செலவில் கொட்டகைத் தேவையில்லை. திறந்தவெளிகளிலும் பட்டிகளிலும் வளர்க்கலாம்
வளர்ப்பு முறை;.
சரியான பராமரிப்புடன் சினை ஆடுகளை வளர்த்தால், ஈனும் குட்டிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு அவற்றை நல்ல ஆரோக்கியத்துடன் வளர்க்க முடியும். அதற்கு கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்.
- குட்டி ஈனும் தருணத்தில் உள்ள சினை ஆடுகளை தனிக் கொட்டிலில் வைத்துக் கவனத்துடன் வளர்க்க வேண்டும்.
- சினை ஆடுகளை ஊசி போடுதல், மருந்தளித்தல் என அடிக்கடி தொந்தரவு கொடுத்தல் கூடாது. முடிந்தவரை தடுப்பூசி மருந்துகளை ஓரிரு தடவைகளில் போட்டு முடித்து விடுதல் நலம்.
- குட்டி ஈனுவதற்கு 3-4 வாரங்கள் முன்பு அதிக அளவில் அடர்தீவனமும் அளிக்கவேண்டும். அவ்வாறு அளித்தால் குட்டி ஈன்றவுடன் பால் சுரப்பு அதிகமாக இருக்கும்.
- சரியான தீவனம் அளிக்கப்படவில்லையெனில் கரு கலைதல், குட்டி இறந்து பிறத்தல், இரத்தத்தில் விஷத்தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
- ஈன்ற குட்டிகளை 4-6 நாளில் தாயிடமிருந்து பிரித்துக் குட்டிகளின் கொட்டிலில் வளர்க்க வேண்டும். முடிந்தவரை குட்டிகளுக்கு மென்மையான தரை அமைப்பு கொண்ட தனித்தனி கொட்டில் அமைத்தல் நலம்.
- குட்டி ஈன்ற ஆடுகளின் பால் தரும் காலத்தைக் கவனித்துக் குறித்து வைத்தல் நலம். பொதுவாக 142-150 நாட்கள் வரை இருக்கும். இதைவிடக் குறைவாக இருந்தால் பால் தரும் நாட்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
- குட்டிகளை குளிர், பனி, மழை வெய்யிலிருந்து முறையாகப் பாதுகாக்க வேண்டும்.
இதை போல தொடர்ந்து பராமரித்து வந்தால் செம்மறி ஆடுகள் விற்பனைக்கு தயாராகி விடும்
வவிற்பன
👉ஆறு முதல் எட்டு மாதம் வரை வளர்க்கப்பட்டு இஸ்லாமியப் பண்டிகைகளில் விற்பனை செய்வதற்கு ஏற்ப வளர்க்கப்படுகின்றன. 25 முதல் 30 கிலோ எடை வந்த உடனே விற்பனை செய்யவேண்டும்.
👉அது மாட்டு இல்லாமல் பண்டிகை , கட்டிசி விழா, திருமணம், போன்ற விசேஷங்களில் விற்பனை செய்யலாம்….
👉 இவ்வாறு செம்மறி ஆடு வளர்த்து விற்பனை செய்தல் மாத ஒரு லச்சத்திற்கு மேல லாபம் ஈட்ட முடியும்….