Prawn Farming Business இறால் வளர்ப்பு லாபகரமான தொழில்

நீங்கள் விரும்பி சாப்பிடும் இறால் …நீங்கள் ஏதிர் பார்க்காத அளவு லாபம் தரும்….சுலபமாக வளர்க்கலாம் !!! சுயமகவும் சம்பாதிக்கலாம்!!

நன்னீர் இறால் வளர்ப்பு நமது நாட்டிற்கு உகந்த லாபகரமான தொழிலாகும். ஏற்றுமதியில் அதிகவிலை, உலகளவில் வரவேற்பு, நோய் எதிர்ப்பு சக்தி, வளர்ச்சியில் வேகம், எந்த உணவையும் ஏற்று கொள்ளும் தன்மை, மற்ற மீன்களோடு சேர்த்து வளர்த்தல், அதிக வருமானம், வளர்ப்பில் குறைந்த இடர்பாடுகள் முதலியவற்றைால் நன்னீர் இறால் வளர்ப்பு நன்னீர் உயிரின வளர்ப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

பொதுவாக ஆண் இறால், பெண் இறாலை விட பெரியது. வேகமாக வளரும் தன்மை கொண்டது. ஆரஞ்சு நிறக் கால்கள் உள்ள ஆண் இறால்கள் வேகமாக வளரக்கூடியவை. பெரிய நீல நிறக் கால்களுடைய இறால்களாக மாறக்கூடியவை.

நீல நிறக்கால்களுடைய ஆண் இறால்கள் முன்பே பருவமடைந்தவை. ஆரஞ்சு நிறக்கால்கள் கொண்டவற்றை விட வளர்ச்சியும், இனப்பெருக்க சக்தியும் குறைந்தவை. வளர்ச்சி குன்றிய ஆண் இறால்கள், மற்ற ஆண் இறால்களை விட சிறியவை.

👉இடத்தை தயார்படுத்துதல் :

👉 இறால் வளர்க்கும் குளங்களை நன்றாக உலரவைத்து இரண்டு முறை உழுவு செய்ய வேண்டும். நிலத்தின் மண்ணை சோதனை செய்து பிறகு தேவையான தாது உப்புகளை இட்டு பின்னர் இறுதி உழவு செய்ய வேண்டும்.

👉 குளத்தைச் சுற்றிலும் நண்டு வலை மற்றும் பறவை விரட்டும் வலைகளை அமைக்க வேண்டும். மேலும் குளங்களுக்கு உள்ளே மற்றும் வெளியே சென்று வருவதற்கு ஒரே ஒரு நுழைவுவாயில் மட்டும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

👉 அதுமட்டுமல்லாமல் குளத்திற்கு நீரேற்றம் செய்ய உதவும் நீர்த்தேக்கத் தொட்டியை சுற்றிலும் நண்டு வலை மற்றும் பறவை விரட்டும் வலைகளை அமைக்க வேண்டும். 

👉 அதன் பின்னர் முறையாக கிருமி நீக்கம் செய்யப்பட்ட மோட்டார் பம்புகள் கொண்டு மூன்று நிலைகளில் நீரை வடிகட்டி குளங்களுக்கு நீர் நிரப்ப வேண்டும். நீர் ஏற்றி மூன்று நாட்கள் கழித்து மாலை வேளையில் குளத்தில் உள்ள நீரை முறையாக கிருமிநீக்கம் செய்ய வேண்டும். பின்னர் மூன்று நாட்கள் கழித்து நீரில் பச்சையம் நிலைப்பட ஏதுவாக, உரங்கள் கொடுக்க தொடங்க வேண்டும்.

👉 இந்நிலையில் பச்சையம் நிலைப்பட ஏதுவாக குளங்களில் காற்றூட்டிகள் அமைக்க வேண்டும். பின்னர் பச்சையம் குளத்தில் நிலைப்பட்டவுடன் கடலோர நீர்வாழ் ஒழுங்கு முறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட குஞ்சு பொரிப்பகத்தில் இருந்து நோய் அற்ற இறால் குஞ்சுகளை வாங்க வேண்டும்.

👉 முன்னதாக நம்முடைய தண்ணீரை அவர்களிடம் கொடுத்து பரிசோதிக்க வேண்டும். அவர்கள் அந்த நீரில் பி.ஹெச் மற்றும் சன்லிட்டி ஆகியவற்றைக் கண்டறிந்து அதற்கேற்றவாறு இறால் குஞ்சுகளை தயார் செய்து கொடுப்பார்கள்.

👉 முதலில் நூறு குஞ்சுகளை மட்டும் வாங்கிவந்து குட்டையில் விடவேண்டும். 48 மணி நேரம் அதனைக் கண்காணித்து எல்லாம் உயிரோடு இருந்தால் திரும்பவும் சென்று நமக்கான இறால் குஞ்சுகளை வாங்க வேண்டும். 

👉 இறால் குஞ்சுகள் விட்டவுடன் ஒரு மாதத்திற்கு அதில் குஞ்சுகள் இருக்கிறதா இல்லையா என்பது தெரியாது. ஒரு ஏக்கருக்கு இரண்டு லட்சம் குஞ்சுகள் விடலாம். ஒரு நாளைக்கு இரண்டு வேளை தீவனங்கள் கொடுக்க வேண்டும்.

👉 இறாலானது நான்கு சமயங்களில் தன்னுடைய தோலை உரித்துக்கொள்ளும். இப்படி தோல் உரிக்க உரிக்கத்தான் அது பெரிதாக வளர்ச்சியடையும்.

👉 இறால் குஞ்சுகளுக்கு என மூன்று அளவில் தீவனங்கள் உள்ளன. இதில் புரோட்டீன் அதிகம் உள்ளன. வாரம் ஒரு முறை குஞ்சுகளை பிடித்து அதன் அளவுக்கு ஏற்றவாறு தீவனம் கொடுக்க வேண்டும். இறால் வளர்ப்பு என்பது மொத்தம் 90 நாட்கள் தான்.

செயற்கை ஆக்சிஜன் :

👉 நீரில் செயற்கையாக ஆக்சிஜனை உண்டாக்க வேண்டும் இது மிக முக்கியமானது. நாம் கொடுக்கும் தீவனம் அனைத்தையும் இறால் எடுத்துக்கொள்ளாது. அதாவது தோல் உரிக்கும் நேரத்தில் உணவை எடுத்துக்கொள்ளாது. அந்த சமயத்தில் ஆறு மணி நேரம் நீருக்கு அடியில் அமர்ந்துவிடும். 

👉 அப்போது இடும் தீவனங்கள் அம்மோனியாவாக மாறிவிடும். இது இறாலுக்கு எரிச்சல் தன்மையை ஏற்படுத்தும். தாவர நுண்ணுயிரிகள் அழிந்தவுடன் செயற்கை முறையில் ஆக்சிஜனை உருவாக்க வேண்டும். 

அறுவடை :

👉 ஒரு ஏக்கரில் இரண்டு லட்சம் இறால் குஞ்சுகள் விடும்போது எப்படியும் 20 சதவீத இறால் குஞ்சுகள் இறந்துவிடும். மீதமுள்ள 1 லட்சத்தது 60000 இறால் குஞ்சுகள் மூலம் 90 நாளில் மூன்றரை டன் வரை இறால் கிடைக்கு

     

                                                                 

Facebook Messenger Twitter WhatsApp

Leave a Comment

Exit mobile version