வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் பார்க்கப் போவது யூஸ்டு கேமரா பற்றி தான் அதற்காக நாம் வந்துள்ளது கல்கத்தா கேமரா மார்க்கெட்.
தற்போது நிறைய நண்பர்கள் புகைப்படத்தின் மீது அதிகமாக ஆர்வம் காட்டி வருகிறார்கள் அவர்களிடம் புதிய கேமரா வாங்குவதற்கான போதிய பண வசதி இல்லாததால் மொபைல் கேமராக்கள் மூலம் மிகவும் அருமையான ரம்யமான புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்கிறார்கள்.
நீங்கள் குறைந்த விலையில் கேமரா வாங்க நினைத்தால் கல்கத்தா மார்க்கெட் மிகவும் உபயோகமாக இருக்கும் அதற்காக நான் கல்கத்தா மார்க்கெட் வந்து உங்களுக்காக ஒரு வீடியோ உருவாக்கியுள்ளேன் இதன் மூலம் நீங்கள் விலை மற்றும் அங்குள்ள நிலவரத்தை அறிந்துகொள்ள முடியும்.
நீங்கள் பழைய கேமரா வாங்க நினைத்தால் நேராக மார்க்கெட் சென்று நீங்கள் ஒரு முறை உபயோகப்படுத்தி பார்த்து வாங்குவதே உத்தமம் காரணம் என்னவென்றால் ஆன்லைனில் வாங்கும் போது உங்களுக்கு உபயோகப்படுத்தி பார்க்க இயலாது.
இந்த மார்க்கெட்டில் சாதாரண கேமரா முதல் மிகவும் விலை கூடிய டிஎஸ்எல்ஆர் மற்றும் பாய் சூட் கேமராக்களும் இருந்தன அதுமட்டுமல்லாமல் வீடியோ எடுப்பதற்கு தகுந்த வீடியோ கேமராக்கள் இங்கு கிடைக்கும்.
இந்த மார்க்கெட்டில்மார்க்கெட்டில் குறைந்தது 300க்கும் மேற்பட்ட கேமரா கடைகள் உள்ளன அதனால் நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கடைகளில் சென்று உங்களுக்கு பிடித்தமான கேமராவை தேர்வு செய்து எடுத்துக் கொள்ள முடியும்.
Table of Contents
வாங்கும் முறை.
ஒன்றுக்கு பலமுறை நன்கு கேமராவை ஆராய்ந்து வாங்க வேண்டும் ஏனென்றால் நீங்கள் இவ்வளவு தூரம் சென்று வாங்கும் போது நீங்கள் திரும்பி செல்ல முடியாது மாற்றுவதற்கு அதனால் ஒன்றுக்கு பலமுறை ஆராய்ந்து வாங்கவும்.
எப்படிப்பட்ட கேமரா வாங்கலாம்.
விலை குறைவாக உள்ளது என்று நினைத்து குறைந்த விலைக்கு நீங்கள் வாங்கும் போது விலைக்கு ஏற்ற போல்தான் கேமராவும் இருக்கும் அதனால் நீங்கள் வாங்கும் கேமரா நல்ல தரத்துடனும் இருக்க வேண்டும் சற்று விலை அதிகமானாலும் நல்ல கேமரா பார்த்து வாங்கிக் கொள்ளவும் அப்போதுதான் உங்களுக்கு அதிக நாள் உழைக்கும்.
அங்குள்ள ஒரு கடை வீடியோ கீழே கொடுத்துள்ளேன் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
மேலும் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கமெண்ட் வாயிலாக தெரியப்படுத்தவும் உடனடியாக நாங்கள் பதில் வைக்கின்றோம் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும் இதுபோன்ற தொழில் சார்ந்த தகவல்களைதகவல்களை உடனடியாக பெறுவதற்கு நமது இணைய பக்கத்தை பின்தொடரவும்.