Site icon TAMIL BUSINESS THAGAVAL

Hollow Block Business ஹாலோ பிளாக் தயாரிப்பு தொழில் குறைந்த முதலீட்டில்

          


ஹாலோ பிளாக் ஆல் ஓவர் ல நம் லாக் பண்ணி ஓவர்லோடு சம்பாதிக்க முடியும்….. அதுவும் குறைந்த முதலீட்டில் !!!!!

👉 Hollow Block கல் இப்போ அதிகமா கட்டிடங்கள் இல்லையோ வீடு உபயோகப்படுத்துவதற்கு இந்த ஆலோபிளாக் கல்தான் பயன்படுத்துறாங்க நகரங்களில் மட்டுமல்ல கிராமங்களில் கூட இந்த ஆலோபிளாக் அதன் பயன்கள் இன்னும் அதிகமா இருக்கு

காரணம்

👉இந்த ஆல பிளாக் கல் குறைந்த விலையிலும் அதிகமா சிமெண்ட் பயன்படுத்துவதற்கான அவசியமில்லாத நாளை இந்த ஆலோபிளாக் அல்ல கிராமங்களில்கூட பயன்படுத்துறாங்க

ஆகையால் இந்த ஆலோபிளாக் கல்லின் விநியோகம் அதிகமாக உள்ளது அதிக வரவேற்பு பெற்றுள்ளது இதை எவ்வாறு தயாரித்து விற்பனை செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்…..

                                       ஹாலோபிளாக் தொழில்!!

தேவைபடும் பொருட்கள்:

👉ஜல்லி (கால் இஞ்ச் அளவுள்ளது),

👉கிரஷர் மண் (பவுடர் போல் இல்லாமல், குருணை போல் இருக்க வேண்டும்.)

👉 சிமெண்ட் (ஓபிசி ரகம்), இதை பயன்படுத்தினால் உற்பத்தி செய்த 4 மணி நேரத்தில் காய்ந்து விடும்.

👉 ஹைட்ராலிக் இயந்திரம் மற்றும் மிக்ஸர் இயந்திரம்.

தயாரிக்கும் முறை:

👉சிமெண்ட் 4 சட்டி (ஒரு மூட்டை), ஜல்லி 9 சட்டி, கிரஷர் மண் 6 சட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு தண்ணீரை தயாராக வைத்திருக்க வேண்டும்.

👉 மிக்ஸர் இயந்திரத்தை இயக்கி, அதில் சிமெண்ட் ஒரு சட்டி, ஜல்லி 2 சட்டி, கிரஷர் மண் 2 சட்டி, ஒரு வாளி தண்ணீர் ஆகியவற்றை வரிசையாக கொட்ட வேண்டும். மீண்டும் அதே அளவில் தொடர்ந்து கொட்ட வேண்டும்.

👉 அவை அனைத்தும் கொட்டிய 5 நிமிடத்துக்குள் கலவையாகும். அவற்றை டிராலியில் கொட்டி, டிராலியை ஹைட்ராலிக் இயந்திரத்தினுள் கொண்டு செல்ல வேண்டும்.

👉 ஹைட்ராலிக் இயந்திரம் நகரும் தன்மை உடையது. அதில் உள்ள ஹாலோபிளாக் அச்சு, தரையில் பதிந்திருக்கும். அச்சுக்குள் கலவையை கொட்டி, அச்சில் உள்ள கலவையை ஏழெட்டு முறை ஹைட்ராலிக் பிரஷர் மூலம் இடித்து நெருக்கினால், ஹாலோபிளாக் கட்டி உருவாகும்.

👉 ஹாலோபிளாக் கட்டியை பிடித்துள்ள அச்சு, பிடியை விட்டு வெளியேறும்.

👉மெஷின் தானாக அடுத்த அச்சு பதிக்க நகர்ந்து கொள்ளும். ஹைட்ராலிக் மெஷினில் ஒவ்வொரு முறையும் 5 கற்கள் தயாராகும்.

👉 ஹாலோபிளாக் கற்கள் 4 மணி நேரத்தில் காய்ந்து விடும், எனினும் 24 மணி நேரம் அதே இடத்தில் வைத்திருந்து,

👉பின்னர் அவற்றை வேறு இடத்தில் அடுக்கி 7 நாள் 3 வேளை தண்ணீர் ஊற்றி வர வேண்டும். பின்னர் 3 நாள் காயவைத்தால் விற்பனைக்கு தயாராகிவிடும்.

தயாரித்த ஹாலோ பிளாக் கற்களை இரும்பு கடைகளிலோ அல்லது சிமெண்ட் விற்பனை கடைகளிலும் விற்பனை செய்யலாம் அல்லது

நாமே ஆலோபிளாக் கற்களை விநியோகம் செய்யலாம் எவ்வாறு செய்தாலும் லாபம் நமக்கு அதிகம் மட்டுமே,

இந்த தொழில் செய்து வெற்றியடைய உங்கள் அனைவருக்கும் எங்களது வாழ்த்துக்கள் இந்தக் கட்டுரை பார்த்து நீங்கள் யாராவது தொழில் தொடங்கி இருந்தாள் உங்கள் மேலான கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் இல் தெரியப்படுத்துங்கள் அப்படி நீங்கள் தெரியப்படுத்தும் போது எங்களுக்கு உத்வேகம் அளிக்கும் மேலும் இதுபோல் தொழில் சார்ந்த பல கட்டுரைகள் உங்களுக்காக நன்றி 🙏

Exit mobile version