Site icon TAMIL BUSINESS THAGAVAL

துணி வாங்க சூரத் செல்வது எப்படி

வணக்கம் நண்பர்களே ..

நம்ம இந்த பதிவில் என்ன பாக்க போறோம் என்றாள் என்கிட்ட நிறைய பேர் கேட்டு இருந்தாங்க துணி வாங்க  சூரத் எப்படி செல்வது  சூரத்தில் இருந்து எப்படி பொருட்களை வாங்குவது இதற்கான தெளிவான வழிமுறைகள் தான் நம்ம பாக்க  போகிறோம்

முதலில்  குறைந்த  பட்ஜெட்டில் நீங்க பர்ச்சேஸ் பண்ண போகின்ற  உங்களுக்க …

நீங்கள் இங்கு இருந்து சூரத் செல்ல  தேர்ந்தெடுக்க வேண்டியது ரயில் பயணம் தான்  அதாவது தமிழ்நாட்டு ரயில்வே ஸ்டேஷன் கோயம்புத்தூரில் இருந்தும்  மற்றும்  சென்னையில் இருந்தும் நேரடியாக  சூரத் சிட்டிக்கு ரயில் வசதி  இருக்கு.
குறைந்தது கோயம்புத்தூரில்  இருந்து  சூரத் செல்ல 36 மணி நேரம் ஆகும் உங்கள் வசதிக்கு ஏற்றார் போல பயணத்தை மேற்கொள்ளலாம்  பயண தொகை   நார்மலா நீங்க போகிறீர்கள் என்றல்  685 ரூபாய் வரும் அதே நீங்க சிலிப்பர் கிளாஸ்ல போகிறீர்கள் என்றல் ஒரு ஆயிரத்து ஐநூறு ரூபா வரும் இல்ல நான் ஏசி கம்பார்ட்மென்டில்  போகிறேன் என்றல்  ஒரு 2500 முதல் 3000 ரூபாய் வரை வரும்.
 இப்ப நம்ம இங்க இருந்து எதுல போறது பெஸ்ட்  சாய்ஸ்   பார்ப்போம் குறைந்த முதலீட்டில் தொழில் பண்றவங்களுக்கு ஸ்லீப்பர் கிளாஸ்  தான் பெஸ்ட் ஆன சாய்ஸ். ஆயிரம் ரூபாயில் முடிஞ்சிடும்.
போகும் நேரம் ஒரு ரெண்டு நாள் ஆகும் நம்ம சூரத்  போய் இறங்கினால்  நிறைய ஏஜென்ட்  (ஏமாற்று பேர்வழிகள்)  இருப்பாங்க..
அவங்க வந்து உங்களிடம்  இங்க வாங்க போகலாம் இந்த கடையில் வந்து ரொம்ப சீப்பா இருக்கும் அப்படி இப்படி சொல்லி  உங்களை ஏமாற்ற பார்ப்பார்கள்  அதை நம்பி நீங்க அவங்க  கூட போயிடாதீங்க காரணம் என்ன வென்றால்  ஒரு  ஏஜென்ட்  அங்க போன உடனே நீங்க ஒரு ஒரு லட்ச ரூபாய்க்கு பர்சேஸ் பண்ணுனால்  10000 வரை  கமிஷன்  இருக்கும்  ..
அந்த 10000 கமிஷனுக்காக உங்கள உற்பத்தியாளர் கிட்ட கூட்டிட்டு போக மாட்டாங்க ஏதாவது ஒரு இடத்தில் கொண்டு போய் அவங்களுக்கு நல்ல கமிஷன் கிடைக்குற  இடத்துல உங்கள பர்சேஸ் பண்ண வைப்பாங்க
 அதனால நீங்க இங்கிருந்து போறதுக்கு முன்னாடி ஒன்றுக்கு பல தடவை யோசனை செய்து  அப்பறம் போங்க சூரத் ரயில்வே ஸ்டேஷன் போய் இறங்கியதும்  பக்கத்துலயே  நிறைய  ஹோட்டல் இருக்கும்  அங்க ஒரு ரூம்  எடுத்து முதலில் ஓய்வு எடுங்க .
 காரணம்  நீங்க பயண களைப்பில்  இருப்பிங்க  அந்த களைப்போடு  மார்க்கெட்  போனீங்கன்னா  உங்களால் பேரம் செய்து  வாங்க முடியாது  அதனால் நல்லா  ரெஸ்ட் எடுத்து புது பொலிவோடு  அடுத்த நாள் காலையில  மார்க்கெட் போங்க
  ஹோட்டல் ரூம்ல இருந்து மார்க்கெட் போறதுக்கு  ஏதாவது ஷேர் ஆட்டோ அல்லது டேக்ஸி புக் பண்ணி நீங்க போக வேண்டிய கடைக்கு நேரா  போங்க.
அங்க போறதுக்கு  முன்னாடியே நிறைய தரகர்  உங்களை வழி மரிப்பாங்க  கொஞ்சம் கூட  அவங்க வார்த்தையில்   விழுந்துராதீங்க  அப்பறம் உங்க பணத்துக்கு யாரும் பொறுப்பு இல்லை..
 மார்க்கெட் போன உடனே பொருட்களை வாங்காதீங்க முதல் முறையாக  போறவங்க  ஒன்று அல்லது இரண்டு கடைகளுக்கு சென்று ரேட்  விதியாசத்தையும்  துணியோட தரத்தையும் தொட்டு பீல் பண்ணி பாருங்க அதுக்கு அப்புறம்   எந்த கடையில் உங்களுக்கு பேஸ்ட்டுனு  தோணுதோ அங்கிருந்து பர்ச்சேஸ் பண்ணுங்க.
பர்ச்சேஸ் பண்ணின   பொருட்களை தயவுசெய்து அவங்கள பார்சல் அனுப்ப விடாம உங்க கண்ணு முன்னாடியே பேக் பண்ண வச்சு அதை பார்சல் ஆபீஸ் அனுப்புற வர கூட இருந்து பார்த்துக்குங்க.
 காரணம் என்ன வென்றல்   தமிழ்நாட்டிலிருந்து போகின்ற  நிறைய பேரு இந்த மாதிரி தான் ஏமாந்து இருக்காங்க நீங்க ஒரு பொருளை காட்டி அவருக்கு பணமும் செலுத்தி விட்டு வந்துவிடுவீர்கள் ஆனா அவங்க அந்த பொருட்களுக்கு பதிலா தரமற்ற பொருட்களை பேக் பண்ணி அனுப்பி வைத்த அனுபவம்  தமிழ்நாட்டுல நிறையவே வந்து இருக்கு.
 அதனாலதான் சொல்றேன் தயவு செய்து  பொருட்களை பார்சல் பண்ற வரை கூடவே இருங்க அப்பதான் உங்கள் பொருட்கள் நல்லபடியா தமிழகம் வந்து சேரும்  இப்ப நீங்க சூரத் போனா சந்திக்க  கூடிய  பிரச்சனைகளை பார்ப்போம் .
நீங்க சூரத் போயிட்டீங்களா அங்க நீங்க சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் என்னவென்று பார்ப்போம் முதல்ல உங்களுக்கு நம்ம ஊர் சாப்பாடு கிடைக்காது அதனால கொஞ்சம் சப்பாத்தி இந்த மாதிரி சாப்பாடு சாப்பிடுவதற்கு உங்க மனச தேதிக்கோங்க  அங்க வந்து பஞ்சாபி டால் இதெல்லாம் கிடைக்கும் உங்களுக்கு அது சாப்பிடுவதற்கு முடியும் என்றால் வாங்கலாம் அப்படி இல்லன்னா சப்பாத்தி ரொட்டி இந்த மாதிரி ஏதாவது சாப்பிட்டு திரும்பி வரும் வரை பொறுத்து கொள்ளுங்கள் .
அதற்கு பிறகு  பைனல் பர்சேஸ் பண்ணிட்டு அன்னைக்கு நைட் ட்ரெயின் ஏறி ஊருக்கு ரிட்டர்ன் வந்துருங்க.
  இந்த தொகுப்புல  நம்ம எப்படி சூரத் போலாம்னு பார்த்தோம்  அடுத்து வரும் தொகுப்பு நம்ம எந்தெந்த கடைகளுக்கு விசிட் பண்ணலாம் என்பதை நான் ஒவ்வொரு கடையாக விரிவாக எழுதுகிறேன் தொடர்ந்து நமது சூரத் பயணத்துடன் இணைந்திருங்கள் இந்த கட்டுரை பிடித்திருந்தால் மறக்காம உங்கள் மேலான  கருத்துக்களை  கீழே கமெண்டில் தெரியப்படுத்துங்கள்
 
தொடரும் இந்த பயணம்
Exit mobile version