மரச்செக்கு எண்ணெய் தொழில் செய்யலாம் வாங்க

மரச்செக்கு எண்ணெய் தொழில் செய்யலாம் வாங்க

மரச்செக்கு எண்ணெயின் மகிமை தெரியுமா உங்களுக்கு ? இதனை மறந்ததால் தான்  இன்று சர்க்கரை நோய், உடல் பருமன் அதிகரிப்பு, இரத்த அழுத்த நோய் போன்ற பல நோய்களால் மக்கள் பெரும் அவதிபடுகின்றனர்.

இன்று நம் உணவில் சுவைக்காக சேர்க்கப்படும் எண்ணெய்களெல்லாம் எண்ணெய் போன்ற வடிவில் இருக்கும் ஒரு செயற்கை பொருளே தவிர சுத்தமான எண்ணெய் அல்ல.

மரச்செக்கு எண்ணெயின் நன்மைகள் பற்றியும் அதன் அவசியம் பற்றியும் ஓரளவிற்கு மக்களிடம் தற்பொழுது விழிப்புணர்வு ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது.

மீண்டும் மரச்செக்கு எண்ணெய் தொழிலை உங்கள் பகுதியில் தொடங்குவதன் மூலம் வழக்கொழிந்த மரச்செக்கு எண்ணெயை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும்…!

தேவையான பொருட்கள்

 ஆமணக்கு வித்து
 எள்வித்து
தேங்காய்
கடலை  வித்துக்கள்

 

 மரச்செக்கு மற்றும் மாடுகள்

தயாரிக்கும் முறை

முதலில் ஏதேனும் ஒரு தரமான எண்ணெய் வித்துக்களை தேர்வு செய்ய  கொள்ள வேண்டும்.

தேர்வு செய்யப்பட்ட பின்னர்  எண்ணெய் வித்துக்களை வெயிலில் நன்றாக காய உலர்த்த  வேண்டும். வித்துக்களில் ஈரப்பதம் இருந்தால் எண்ணெய் நன்றாக  வராது.

மரச்செக்கில் மாடுகளை பூட்டி, அதனுள் வித்துக்களை போட்டு நன்றாக அரைக்க வேண்டும். அரைக்கப்பட்ட வித்துக்களை எடுத்து வெயிலில் வைத்தாலே போதும் எண்ணெயும் புண்ணாக்கும் தனியாக பிரிந்து விடும். இதற்கு தனியே பிரித்தெடுக்கும் இயந்திரம் என எதுவும் தேவையில்லை.

பிரித்தெடுக்கப்பட்ட எண்ணெயை பாட்டிலில் அடைத்தால் விற்பனைக்குத் தயார்.

புண்ணாக்கு கால்நடையின் தீவனம் என்பதால் எஞ்சியுள்ள புண்ணாக்கும் கூட நல்ல விலைக்கு விற்கலாம் .

விற்பனை செய்யும்  முறை

நீங்கள் இந்த தொழிலை செய்தாலே போதும் உங்களை தேடி மக்கள் கூட்டம் தானாகவே வரும்.

அடுத்த  தொழில் சார்ந்த கட்டுரையில்  சந்திப்போம்

Facebook Messenger Twitter WhatsApp

Leave a Comment

Exit mobile version