Site icon TAMIL BUSINESS THAGAVAL

பேப்பர் பை தயாரிக்கும் முறை

பேப்பர் பை தயாரிக்கும் முறை 
 
 

 

  மண்ணின் வளத்தையும், மக்களின் நலனையும் சீர்குழைப்பதில் பெரும் பங்கு வகிப்பது பிளாஸ்டிக் மட்டுமே… இதற்கு காரணம் இதன் மக்கிப்போகாத தன்மையும், நச்சுத்தன்மையான வாயுவை வெளியிடும்  இதன் தீவிரத்தை உணர்ந்த பல நாடுகள் பிளாஸ்டிக்கை உபயோகிக்க தடை விதித்துள்ளன. இன்று நம் தமிழகத்திலும் இதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்டு வருகின்றன. அரசாங்கம் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக பேப்பர் பைகளை உபயோகிக்க வலியுறுத்தி வருகின்ற இந்த நேரத்தில் பேப்பர் பை தொழிலை நம்பி இறங்கினால் நிச்சயம்  தொழில் செய்து வெற்றி பெறலாம். இதற்கான முதலீடு மிகவும் குறைவுதான். நீங்கள் நினைக்கலாம் பேப்பரில் பை செய்வது சாத்தியமா, இதனை உபயோகப்படுத்த முடியுமா என்று..! ஆம் சாத்தியம்தான் இத்தொழிலில் சாதித்தோர் பலர் உள்ளனர். இப்போது இத்தொழிலை வீட்டிலேயே எப்படி தொடங்குவது என்பதைப்பற்றி விரிவாக  பார்ப்போம்

 

 இதற்கு தேவையான பொருட்கள் :

 

  • கோல்டன் யெல்லோ ஷீட் அல்லது டியூப்ளக்ஸ் ஷீட்
  • கட்டிங் அண்ட் கிரீசிங் மெஷின்
  • மெட்டல் வளையம்
  • கைப்பிடிக்குத் தேவையான கயிறு மற்றும் பசை

 

தயாரிக்கும் முறை

 

எந்த வகை பேப்பர் ஆனாலும், தயாரிப்பு முறை ஒன்று தான். முதலில் தயாரிக்கப்படவுள்ள அளவை பேப்பரில் ஸ்கேல் வைத்து அளந்து மார்க்   செய்து கொள்ள வேண்டும்.

 

அதை கையால் உபயோகிக்க கூடிய கட்டிங் அண்ட் கிரீசிங் மெஷினில் வைத்து தேவையான அளவுகளில்  வெட்டி, கீழ்பகுதியில்  மடக்கி  கொள்ளவும்.

 

அடிப்பாகத்தை வலுப்படுத்த, அட்டை ஒன்றை ஒட்ட வேண்டும்.

 

கைப்பிடி சேர்க்க மேல்பாகத்தின் நடுவில் இருபுறமும் 2 துளைகளை போட வேண்டும்.

 

துளை போட அந்த மெஷினையே பயன்படுத்தி கொள்ளலாம். கைப்பிடி கிழியாமல் இருக்க, மெட்டல் வளையத்தை பிரேம் செய்ய வேண்டும்.

 

கடைசியாக துளையில் கயிறு கோர்த்து முடிச்சுபோட்டால் இப்போது  பேப்பர் பை தயாராகிவிட்டது 

 

விற்பனை செய்யும் முறை

 

ஜவுளிகடை , டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள் என பல்வேறு வியாபார நிறுவனங்களில் ஆர்டர் பிடிக்கலாம்.பேப்பர் பைகளில் நிறுவனங்களின் பெயர்களை அச்சடித்து கொடுத்தால் பைகளுக்கு மதிப்பு கூடும். அதுபோல நாம் உருவாக்கும் டிசைன்களுக்கு ஏற்ப அதிக விலையும் கிடைக்கும் …….
 
இந்த தொழில் பற்றிய கருத்துக்களை கமெண்டில் தெரிய படுத்தவும்….


பிளாஸ்டிக்கின் தீமைகள்
 

நாய் , கால்நடைகள், வனவிலங்குகள் போன்றவை உணவுடன் பிளாஸ்டிக் குப்பையை உட்கொள்வதால் உணவுக் குழாய் அடைப்பாட்டினால் துன்புறவும், மரணமடையவும் செய்கிறது
வீட்டிலிருந்து தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணின் தன்மையைப் பாதிக்கிறது.
பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் போன்றவை எக்காலத்திலும் அழியாது. இவைகள் சாக்கடைகள் போன்ற இடங்களில் அடைத்து கொண்டு பல சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.
நம் அன்றாட வாழ்வில் தூக்கியெறியப்படும் பிரிக்காத குப்பைகளினால் கொசுக்களால் பரவும் கொடிய நோய்கள் உருவாக காரணமாகிறது
பிளாஸ்டிக் உறைகளால் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட, உணவுப்பொருட்களால் உடலுக்கு பல நோய்களை ஏற்படுத்துகிறது

பிளாஸ்டிக் மட்குவதற்கு ஆகும் காலம்
 
பிளாஸ்டிக் பைகள்       (100-1000 ஆண்டுகள்)
பஞ்சுக் கழிவுகள்         (1-5 மாதங்கள்)
காகிதம்                  (2-5 மாதங்கள்)
உல்லன் சாக்ஸ்          (1-5ஆண்டுகள்)
டெட்ரா பேக்குகள்        (5ஆண்டுகள்)
தோல் காலணி           (25-40 ஆண்டுகள்)
டயபர் நாப்கின்           (500-800 ஆண்டுகள்)
 
 
Exit mobile version