Site icon TAMIL BUSINESS THAGAVAL

ஆச்சி மசாலா டீலர்ஷிப் தொழில் | HOW TO START AACHI MASALA DEALERSHIP BUSINESS IDEAS IN TAMIL

Aachi masala dealership business ideas in Tamil

வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது ஆச்சி மசாலா டீலர்ஷிப் தொழில் எப்படித் தொடங்கலாம் என்று தான்

ஆச்சி மசாலா நிறுவனம் மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய மசாலா பொருட்களை தயாரித்து வருகின்றனர் இவர்களின் தயாரிப்பு FMCG தயாரிப்புகள் ஆகும் FMCG என்றால் பலருக்கு தெரிந்திருக்கலாம்.

தெரியாதவர்களுக்கு சொல்கிறே தெரியாதவர்களுக்காக சொல்கிறேன் அதன் முழு விளக்கம் FAST MOVING CONSUMER GOODS மக்கள் அன்றாடம் வாங்கக்கூடிய பொருட்கள் ஆகும்.

இவர்களது நிறுவனத்தில் நீங்கள் டீலர்ஷிப் எடுத்தாள் உங்களுக்கு நிறைய வியாபாரமாகும் அதன் மூலம் நீங்களும் நல்ல லாபத்தை பெற முடியும்.

அவர்களிடம் பொருட்களை நீங்கள் சூப்பர்மார்க்கெட் ஹோட்டல் பெட்டி கடைகள் மளிகை கடைகள் போன்ற பலசரக்கு கடைகளில் விற்பனை செய்யலாம் மசாலா பொருட்களுக்கு அதிக டிமாண்ட் உள்ளதால் உங்களது விற்பனையும் அதிகமாக இருக்கும்.

ஆச்சி மசாலா டீலர்ஷிப் எடுப்பதற்கான வழிமுறை பார்க்கலாம்.

முதலாவதாக நீங்கள் அவர்களிடம் வாங்கும் மசாலா பொருட்களை தேக்கி வைப்பதற்கு உங்களிடம் குறைந்தது 800Sq.ft முதல் 2000 Sq.ft குடோன் தேவை.

இரண்டாவதாக 3 PHASE கரண்ட் இருக்க வேண்டும்.

மூன்றாவதாக குறைந்தது உங்களிடம் இரண்டு வேலை ஆட்கள் இருக்க வேண்டும்.

அடுத்ததாக உங்கள் நிறுவனத்தின் பெயரில் GST இருக்க வேண்டும்.

UDYOG ஆதார் கட்டாயம் தேவை நீங்கள் உணவு பொருட்களை விற்பதால்  புட் சேப்டி சர்வீஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவிலிருந்து FSSAI சான்றிதழும் தேவைப்படும்.

ஆச்சி நிறுவனத்தின் டீலர்ஷிப் முதலீடு.

ஆச்சி மசாலா டீலர்ஷிப் தொழில் பொருத்தவரை நீங்கள் கொஞ்சம் அதிகமாக பணம் முதலீடு செய்ய வேண்டியிருக்கும் அதே சமயம் உங்களுக்கு லாபமும் அதிகமாக கிடைக்கும்.

குறைந்தது 8 லட்சம் முதல் 10 லட்சம் வரை முதலீடு செய்ய வேண்டியிருக்கும் நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு அவர்கள் மசாலா பொருட்களை கொடுத்து விடுவார்கள்.

நீங்கள்குறைந்த முதலீட்டில் ஆச்சி மசாலா வியாபாரம் செய்ய நினைத்தால் ஏற்கனவே டீலர்ஷிப் எடுத்து வைத்துள்ள அவர்களிடம் பேசி அவர்களிடம் இருந்து மசாலா பொருட்களை எடுத்து வியாபாரம் செய்யலாம் அதன் மூலமும் நல்ல லாபம் கிடைக்கும்.

ஆச்சி நிறுவனத்தின் டீலர்ஷிப் எடுப்பது எப்படி.

ஆச்சி மசாலா நிறுவனத்திற்கு டீலர்ஸ் தேவைப்பட்டால் அவர்கள் அதிகமாக செய்தித்தாளில் விளம்பரம் தருவார்கள்.

இந்த விளம்பரம் இந்தியா மட்டுமல்லாது பல உலக நாடுகளிலும் விளம்பரப்படுத்தப்படும் நீங்கள் இந்த உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் ஆச்சி மசாலா  டீலர்ஷிப் எடுத்து வியாபாரம் செய்யலாம்.

ஆச்சி மசாலா நிறுவனத்தை நீங்கள் நேரடியாக தொடர்பு கொள்ள நினைத்தால் இவர்களது இணையதள முகவரிமுகவரி கொடுத்துள்ளோம் இந்த இணையதள வாயிலாக நீங்கள் இவர்களை தொடர்பு கொள்ளலாம்.

இந்த இணையதளத்தில்  ஆச்சி மசாலா தொலைபேசி எண் இருக்கும் அதற்கு கீழ் ஆச்சி மசாலா அலுவலக நேரமும் இருக்கும் அந்த நேரத்தில் நீங்கள் அவர்களை தொடர்பு கொண்டு பேசலாம்.

ஆச்சி  நிறுவனத்தின் பொருட்களை விற்பதன் மூலம் எவ்வளவு லாபம் கிடைக்கும்.?

ஆச்சி மசாலா பொருட்களை நீங்கள் வாங்கி விற்பதன் மூலம் 8 சதவிகிதம் லாபம் கிடைக்கும்.

10  லட்சம் ரூபாய்க்கு டீலர்ஷிப் எடுத்து பொருட்களை விற்பனை செய்து இருந்தாள் உங்களுடைய லாபம் 8 சதவிகிதம் என்பதால் மாதம் 80 ஆயிரம் கிடைக்கும் அதுவே நீங்கள் மாதம் 15 லட்ச ரூபாய் உடைய பொருட்களை விற்பனை செய்தால் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும்.

ஆச்சி மசாலா டீலர்ஷிப்டீலர்ஷிப் கட்டுரையை முழுமையாக படித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன் உங்களுக்கு தொழில் செய்வதற்காக பல உந்துதல்களை நாங்கள் தருகிறோம்.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் நமது கட்டுரையை பகிரவும் அனைவரும் தொழில் செய்து வெற்றியடைய வாழ்த்துக்கள்.

Exit mobile version