Site icon TAMIL BUSINESS THAGAVAL

சிரமம் இல்லாத தொழில் சீகக்காய் தொழில்

சீக்கிரம் பணம் காய்க்கும் தொழில்!!!
சீகக்காய் தொழில்!!!!!!

👉ஷாம்பு உங்க எல்லாருக்குமே தெரியும் இந்த சாம்பிளை எவ்வளவு கெமிக்கல்ஸ் இருக்கு அப்படின்னு.


👉 அந்த காலத்துல சீகைக்காய் பொடியை தலைக்கு தேய்த்து குளிப்பார்கள் முடி ஆரோக்கியமாகவும் கருகருன்னு நீளமாகவும் இருந்துச்சி ஆனா இந்த காலத்துல எல்லாரும் அட்வான்ஸ் அப்படின்னு சொல்லிட்டு கெமிக்கல் தான் பயன்படுத்துரோம்.


👉இதனால் எந்த பயனும் நமக்கு அளிக்கிறது கிடையாது முடி கொட்டுது கருமை இல்ல அதிகமான பிரச்சனைகள் தரக்கூடிய தான் இருக்கு

👉ஆனா இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா பழைய காலத்திற்கு மாறிகிட்டே வராங்க

அதனால இந்த சீகைக்காய் அதிகமாகக் மக்கள் பயன்படுத்துறாங்க காரணம் பழைய காலத்து முறையை கையாளும் முடியல அதனால இந்த சீகைக்காய் தொழிலை இப்ப நம்ம சொன்னா கரெக்டா இருக்கும் நிறைய லாபம் கிடைக்கவும்

இந்த சீகக்காய் வியாபாரம் நீங்களும் தொடங்கலாம் இதை எப்படி தயாரிப்பது எப்படி விற்பனை செய்வது என்று பார்க்கலாம்..

தேவையான பொருட்கள் :
👉 சீயக்காய் – 1 கிலோ
👉 செம்பருத்திப்பூ- 50
👉 பூலாங்கிழங்கு – 100 கிராம் (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)
👉 எலுமிச்சை தோல் – 25
👉பாசிப்பருப்பு – கால் கிலோ
👉 மரிக்கொழுந்து – 20 குச்சிகள்
👉 கரிசலாங்கண்ணி இலை – 3 கப்

சீகைக்காய் பொடி

செய்முறை :
👉மேற்கண்ட பொருட்கள் அனைத்தையும் வெயிலில் நன்கு காயவைத்து, பின்பு மெசினில் அரைத்து கொள்ள வேண்டும்.
👉 மேலும் நமக்கு தேவையான அளவுகளில் கால் கிலோ, அரை கிலோ போன்ற பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யலாம்.

பயன்கள் :
மேற்குறிப்பிட்ட முறையில் தயார் செய்த சீயக்காய் தூளை உபயோகப்படுத்தும் போது முடி உதிர்வை கட்டுப்படுத்தி, மேலும் பொடுகை நீக்கி, முடி கருமையாக வளர உதவுகிறது

பலர் இன்னும் கூந்தலுக்கு சோப்புகளை தான் பயன்படுத்துகின்றனர். அவை உங்கள் தலைச்சருமத்தை வறட்சியாக்கி, செபோர்ஹெயிக் டெர்மட்டிட்டிஸ் எனப்படும் அழற்சி நிலையை ஏற்படுத்துவதால், அவை கூந்தலுக்கு ஏற்றது இல்லை ஆனால் சீயக்காயிலோ பி.எச். அளவு குறைவாக இருக்கும். அதோடு சேர்த்து அது மிதமான தன்மையை கொண்டுள்ளதால், மென்மையான தலைச்சருமத்தை கொண்டவர்களும் கூட இதனை பயன்படுத்தலாம். இது தலைச்சருமத்தை வறட்சியாக்காது.

உங்கள் கூந்தலில் உள்ள அதிகப்படியான சிக்கலை நீக்கவும் சீயக்காய் உதவும். அதனால் சீயக்காய் பயன்படுத்திய பிறகு தனியாக ஹேர் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இருக்காது .

விற்பனை செய்யும் முறைகள் :
இயற்கை முறையில் சீயக்காய் தயார் செய்வதால் விற்பனைக்கு பஞ்சமில்லை. இதனை அருகில் உள்ள கடைகளுக்கு மொத்தமாகவும் அல்லது சில்லரையாகவும் விற்பனை செய்யலாம்.

Exit mobile version