Site icon TAMIL BUSINESS THAGAVAL

ஆடு வளர்ப்பு தொழில் Goat Farming Business

சுயதொழில் செய்ய ஏற்ற தொழில் ….
லாபம் பெருகேடுத்து ஓடக்கூடிய தொழில் ஆடு வளர்ப்பு!!!!!!!!!

👉 வரப்பின் நன்மைகள்
👉 வளர்ப்பு முறை
👉 உணவு
👉 விற்பனை

செம்மறி ஆட்டின் நன்மைகள்:

  1. செம்மறி ஆட்டிலிருந்து இறைச்சி, கம்பளம், தோல், எரு மற்றும் பால் மூலம் வருவாய் கிடைக்கிறது.
  2. ஒரு செம்மறி ஆடு ஒரு ஆண்டிற்கு  500 முதல் 700 கிலோ எரு உற்பத்தி செய்கிறது.
  3. செம்மறி ஆடுகள் புல்லின் மேற்பகுதியை மட்டுமே மேய்வதால் மேய்ச்சல் தரைகள் அழிவதில்லை. மரங்களையும் இவை அழிப்பதில்லை.
  4. செம்மறியாடுகள் மந்தையாகவே நடமாடுவதால் பராமரிப்பு எளிது. 100 ஆட்டிற்கு 1 நபர் போதுமானது.
  5. அதிகச் செலவில் கொட்டகைத் தேவையில்லை. திறந்தவெளிகளிலும் பட்டிகளிலும் வளர்க்கலாம்

வளர்ப்பு முறை;.

சரியான பராமரிப்புடன் சினை ஆடுகளை வளர்த்தால், ஈனும் குட்டிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு அவற்றை நல்ல ஆரோக்கியத்துடன் வளர்க்க முடியும். அதற்கு கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்.

  1. குட்டி ஈனும் தருணத்தில் உள்ள சினை ஆடுகளை தனிக் கொட்டிலில் வைத்துக் கவனத்துடன் வளர்க்க வேண்டும்.
  2. சினை ஆடுகளை ஊசி போடுதல், மருந்தளித்தல் என அடிக்கடி தொந்தரவு கொடுத்தல் கூடாது. முடிந்தவரை தடுப்பூசி மருந்துகளை ஓரிரு தடவைகளில் போட்டு முடித்து விடுதல் நலம்.
  3. குட்டி ஈனுவதற்கு 3-4 வாரங்கள் முன்பு அதிக அளவில் அடர்தீவனமும் அளிக்கவேண்டும். அவ்வாறு அளித்தால் குட்டி ஈன்றவுடன் பால் சுரப்பு அதிகமாக இருக்கும்.
  4. சரியான தீவனம் அளிக்கப்படவில்லையெனில் கரு கலைதல், குட்டி இறந்து பிறத்தல், இரத்தத்தில் விஷத்தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
  5. ஈன்ற குட்டிகளை 4-6 நாளில் தாயிடமிருந்து பிரித்துக் குட்டிகளின் கொட்டிலில் வளர்க்க வேண்டும். முடிந்தவரை குட்டிகளுக்கு மென்மையான தரை அமைப்பு கொண்ட தனித்தனி கொட்டில் அமைத்தல் நலம்.
  6. குட்டி ஈன்ற ஆடுகளின் பால் தரும் காலத்தைக் கவனித்துக் குறித்து வைத்தல் நலம். பொதுவாக 142-150 நாட்கள் வரை இருக்கும். இதைவிடக் குறைவாக இருந்தால் பால் தரும் நாட்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
  7. குட்டிகளை குளிர், பனி, மழை வெய்யிலிருந்து முறையாகப் பாதுகாக்க வேண்டும்.

இதை போல தொடர்ந்து பராமரித்து வந்தால் செம்மறி ஆடுகள் விற்பனைக்கு தயாராகி விடும்

வவிற்பன

👉ஆறு முதல் எட்டு மாதம் வரை வளர்க்கப்பட்டு இஸ்லாமியப் பண்டிகைகளில் விற்பனை செய்வதற்கு ஏற்ப வளர்க்கப்படுகின்றன. 25 முதல் 30 கிலோ எடை வந்த உடனே விற்பனை செய்யவேண்டும்.

👉அது மாட்டு இல்லாமல் பண்டிகை , கட்டிசி விழா, திருமணம், போன்ற விசேஷங்களில் விற்பனை செய்யலாம்….

👉 இவ்வாறு செம்மறி ஆடு வளர்த்து விற்பனை செய்தல் மாத ஒரு லச்சத்திற்கு மேல லாபம் ஈட்ட முடியும்….

Exit mobile version