பல்லாவரம் சந்தை ஒரு சிறப்பு பார்வை|Friday market
வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் என்ன பார்க்க போகிறோம் என்றால் பல்லாவரம் சந்தை பற்றிதான் பற்றிதான் நான் இப்போது பல்லாவரம் வந்துள்ளேன்.
பல்லாவரம் சந்தை என்பது பல்லாண்டு பழமையானது இங்கு அனைத்து விதமான பழைய பொருட்களும் குறைந்த விலையில் கிடைக்கும் இது வெள்ளிக்கிழமை மட்டுமே நடைபெறும் இந்த பல்லாவரம் சந்தையில் வீட்டு உபயோக பொருட்கள் அடுத்ததாக செல்லப்பிராணிகள் மளிகை பொருட்கள் மற்றும் அனைத்து விதமான உபயோக பொருட்களும் இருந்தன வாருங்கள் நான் வந்து வெள்ளிக்கிழமை அன்று காலை 8 மணி அளவில் பல்லாவரம் Friday market சென்றேன் நான் சென்றது வண்ணாரப்பேட்டையில் இருந்து வண்ணாரப்பேட்டையில் இருந்து பல்லாவரம் செல்வதற்கு ரயில் வசதி இருந்தது ரயிலில் இறங்கிய உடன் வெளியே சென்றால் பல்லாவரம் சந்தை தான்.
முதலில் நம் கண்ணில் பட்டது சோபா பழையதும் புதியதும் இருந்தது நாம் விலை கேட்டோம் பழையது 5000 முதல் புதியது பத்தாயிரம் முதல் டெலிவரி இருக்கா என்று கேட்டோம் டெலிவரி இல்லை என்று சொல்லிவிட்டார்கள் நீங்கள் நேராக டெம்போ பிடித்து அங்கு சென்று பொருட்களை ஏற்றிக் கொள்ளலாம் வீட்டிற்கு தேவையான பீரோ கட்டில் இருந்தது இதன் விலை அதிகமாகவே சொன்னார்கள் சிலர் பேசி குறைந்த விலைக்கு வாங்கி சென்றனர் மரக்கட்டில் விலை 5000 முதல் தொடங்கியது அவர்களிடம் டைனிங் டேபிள் டீ பாய் மர பீரோ மரச் சேர்கள் இருந்தன இவர்களிடமும் நீங்கள் குறைத்து பேசி வாங்க முடியும் நேராக சென்றாள் பல்லாவரம் சந்தை பொறுத்த அளவில் நமது பேச்சாற்றல் மூலம் விலை குறைத்து வாங்கி கொள்ளலாம்.
அடுத்து நம் கண்ணில் பட்டது மொபைல் டெம்பர் கிளாஸ் டெம்பர் கிளாஸ் பல தரத்தில் இருந்தது தொடக்க விலை பத்து ரூபாய் முதல் நிறைய நண்பர்கள் அங்கும் நண்பர்கள் சொல்லிக் கொண்டுதான் இருந்தார்கள் நாமும் பார்த்தோம் மேட் 5d 11d மற்றும் மொபைலுக்கு தேவையான அனைத்து வகையான டெம்பர் கிளாஸ் மொபைல் பின் தரம் ஓட்டக்கூடிய ஸ்டிக்கர் இவை அனைத்தும் இருந்தன அதன் அருகிலேயே மொபைலுக்கு தேவையான பழைய சார்ஜர்கள் இருந்தது நமது நண்பர் அதை வாங்கி பரிசோதித்து பார்த்தார் அதில் சிலது வொர்கிங் கண்டிஷனில் இருந்தது.
அடுத்து நாம் பார்த்தது லேப்டாப் பேக் இதன் விலை 200 ரூபாய் சொன்னார் நாங்கள் குறைத்துக் கொடுப்பீர்களா என்று கேட்டதற்கு இல்லை இதுதான் கடைசி இல்லை என்று சொல்லிவிட்டார் 200 ரூபாய்க்கு தகுந்த பேக் தான் இதனால் வெளியில் சென்று கடையில் வாங்கினால் குறைந்தது 350 400 ரூபாய் கொடுக்க வேண்டியது இருக்கும் அடுத்து நாம் பார்த்தது இரும்பு பீரோ இந்த ரக பிரிவிலும் பல மாடல்கள் இருந்தன பழைய பீரோக்கள் பெயிண்டிங் செய்து பழுது நீக்கி வைத்திருந்தார்கள் அருமையாக இருந்தது என்று சொல்லலாம் அவை 4000 முதல் தொடக்க விலையில் இருந்தது 25 ஆயிரம் மதிப்புள்ள பிரோ இவர்களிடத்தில் பத்தாயிரம் முதல் இருந்தன.
அதற்கு அடுத்து நம் கண்ணில் பட்டது அலுவலகங்களில் உபயோகிக்கக் கூடிய கூடிய நாற்காலிகள் இதன் விலை 600 ரூபாய் முதல் தொடங்கியது பழுதுகள் நீக்கி உபயோகிக்க கூடிய வண்ணத்தில் இருந்தது அடுத்து நாம் பார்த்தது வீட்டில் உபயோகிக்கக்கூடிய திரைகள் இதன் விலை 150 ரூபாய் முதல் அடுத்ததாக நான் பார்த்ததே ஏர்கூலர் இதன் விலை 1200 சொன்னார்கள் நம் குறித்து கேட்டதும் கடைசியாக 900 ரூபாய்க்கு தருவதாக ஒத்துக் கொண்டார்கள் நாம் விலை பேசிக்கொண்டு இருக்கும்போது பக்கத்திலேயே இருந்தது ஹோம் ஜிம் இதன் விலை புதியது பதினெட்டாயிரம் இவர்களிடத்தில் அதிகம் பயன்படுத்தாத ஹோம் ஜிம் 500 ரூபாய் சொன்னார்கள் அடுத்து பாத்தீங்கன்னா வீட்டில் உபயோகிக்க கூடிய லாக்கர் இருந்துச்சு 1200 ரூபாய் சொல்றாங்க நீங்க குறித்து பேசிக் கொள்ள முடியும் அதற்கு அடுத்து நாம் பார்த்தது நைட் பேண்ட் இன்னர் வேர்ஸ் இது வந்து பாத்தீங்கன்னா தகுந்த விலை தான் பல்லாவரம் சந்தை பொருட்கள் நீங்க ஒரு பொருளை வாங்க போறீங்க அப்படின்னா அவங்க வந்து விலை இரட்டிப்பாக தான் சொல்லுவாங்க.
நீங்க முடிந்தளவுக்கு 50 சதவிகிதம் குறைத்தே கேளுங்க கண்டிப்பா கொடுக்க வாய்ப்புகள் இருக்கு நான் நடந்து கொண்டே இருக்கும் போது பக்கத்தில் பார்த்துக்கலாம் இந்த கோடையின் வெப்பத்தை தணிக்க கூடிய ஏசி ஏர் கூலர் எல்லாம் இருந்துச்சு ஏசி விலை பார்த்தீங்கன்னா 7000 வாயில் இருந்து தொடங்குகின்றது அதனைத் தொடர்ந்து நம் கொஞ்ச தூரம் நடந்தோம் அங்க பாத்தீங்கன்னா கோழிக்குஞ்சுகள் நிறைய இருந்துச்சு அதில் நம்ம கண்ணுல பட்டது கருங்கோழி வான்கோழி கின்னிக்கோழி கோழிக்குஞ்சுகள் ஃபேன்ஸி கோழிகள் புறா வகைகள் குறிப்பா மாடப்புறா கர்ண புறா பந்தயத்தில் விடக்கூடிய புறாக்கள் கூட இருந்துச்சு அதுமட்டுமல்லாமல் நாய்க்குட்டிகள் நிறைய வகை.
அதுல நம்மள ரொம்ப கவர்ந்தது பொமேரியன் நாய் குட்டி ரொம்ப அழகா இருந்துச்சு 4000 ரூபாய் முதல் விலை சொன்னார்கள் நம்ம வாங்கனும்னு பேசியிருந்தா 500 ரூபாய் குறைத்து கூட வாங்கி இருக்கலாம் அது பக்கத்திலேயே கண்ணை கவரக்கூடிய ஆப்பிரிக்கன் லவ் பேர்ட்ஸ் இங்கு பார்க்க கூடிய அழகான லவ் பேர்ட்ஸ் அப்புறம் சங்கனூர் வகைகள் இருந்துச்சு கடைசியா நம்ம இந்த மார்க்கெட்டை சுற்றி முடிக்க இரண்டு மணி நேரம் ஆயிருச்சு இருந்தாலும் நம்ம சந்தையை முழுமையா சுத்தி முடிக்கல இந்த சந்தையின் சுற்றளவு ஒரு மூணு கிலோமீட்டர் இருக்கும் குறிப்பாக நான் சொல்ல வந்தது என்னன்னா வீட்டுக்கு தேவையான அனைத்து விதமான மளிகை பொருட்களும் இந்த சந்தையில் கிடைக்கும்.
இந்த மார்க்கெட் பார்த்தீங்களா வெள்ளிக்கிழமை காலையில் 6 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை நடைபெறும் வெள்ளிக்கிழமை மட்டும் தான் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருக்கும் நினைக்கிறேன் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் மீண்டும் நல்ல ஒரு கட்டுரையில் உங்களை சந்திக்கின்றேன் இந்த சந்தையின் வீடியோ கீழே கொடுத்துள்ளேன் காணொளியாக பார்க்க விரும்புபவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளவும் நன்றி