மாட்டு பால் பண்ணை தொழில் Mattu Pannai Business

சுயதொழில் செய்ய ஆசையா???
எழிமய செய்ய ஆசையா?????
அதிக லாபமும் பெற ஆசையா???
அதற்கு சிறந்த தொழில் மாட்டு பால் பண்ணை……

👉மாட்டு பால் பண்ணை ரொம்ப கஷ்டமாக இருக்கும் நு நெனைக்ரவங்களுகு 

நா ஒன்னு சொல்றேன். ..

👉ரொம்ப முக்கியமான விஷயம் பால் பண்ணை அமைப்பதற்கு எர்ட்ட இடமும் கறவை மாடும் தேர்வு செய்வது மிகவும் அவசியம்

மாட்டை வளர்க்கும் இடம் 

👉 மாடு வளர்க்க இடம் எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்றால்

 வயலுக்கு அருகில் குறிப்பிட்ட அளவுக்கு நிலம் ஒன்று தேர்வு செய்ய வேண்டும்

அந்த இடத்தில் நீங்கள் எவ்வளவு மாட தேர்வு  செய்கிறீர்களோ அதற்கு ஏற்றது போல் நிலத்தை வரப்பு போல் அமைக்க வேண்டும்

 அப்பொழுதுதான் மாட்டின் சிறுநீர் மற்றும் சாணத்தை எலக்ட்ரிக் வாட்டர் மூலம் சுத்தம் செய்யும்போது அந்த காவா ஆயில் விலும்.

அந்த காவாயை ஒரு நிலத்தில் முழுகிய தொட்டியில் செலுத்தும் வழியாக அமைக்க வேண்டும் அந்த கழிவானது விவசாயத்திற்கு உரமாக பயன்படுத்தப்படும்.

மாட்டுப்பண்ணை வைப்பவர்களுக்கு இது மிகவும் எளிமையான வழி

பால் கரவைக்கு சிறந்த மாடு (களபினம் பசு)

கறவை மாடு வளர்ப்பு:

  1.  கால்நடை வளர்ப்பிற்கான கூடாரம் ஈரப்பதம் இன்றி வறட்சியாக அமைக்க வேண்டும்.
  2. அடைமழை போன்ற பெரு மழையின் போது நீர் தேங்கி நிற்கும் பகுதிகளை கூடாரம் அமைக்க தவிர்க்க வேண்டும்.
  3. இதனுடைய சுவர்கள் 1.5 வழ 2 மீ உயரம் இருக்க வேண்டும்.
  4. இந்த கூடாரத்தின் சுவர்கள் ஈரம் கசியாத வண்ணம் பூசியிருக்க வேண்டும்.
  5. இதன் கூரை 3-4 மீட்டர் உயரம் இருக்க வேண்டும்.
  6. இந்த மாட்டு தொழுவம் சிறந்த காற்றோட்ட வசதியுடன் இருக்க வேண்டும்.
  7. இந்த தரை சரியான / கடினமான, வழுக்காத, சிறந்த முறையாக (3 செ.மீ) நீர் வடிய கூடிய முறையில் எளிதில் உலரும் படியாகவும் சரிவாக அமைக்க வேண்டும்.
  8. வளர்க்கப்படும் கால்நடைகள் நிற்கும் இடமானது 0.25மீ அளவில் சரியான அகன்ற வடிகால் வசதியுடன் இருக்க வேண்டும்.
  9. ஒவ்வொரு கால்நடைக்கும்மான இடைவெளி 2×1.05 மீ ஆகும்.
  10. கால்நடைகளுக்கான தீனி தொட்டி 1.05 மீட்டர் இடத்திலும் அதன் முன் உயரம் 0.5 மீ மற்றும் அதன் ஆழம் 0.25 மீட்டர் அளவிலும் இருக்க வேண்டும்.
  11. தீவனத் தொட்டி, தண்ணீர் தொட்டி, வடிகால் வசதி மற்றும் சுவர்கள் இவைகள் யாவும் எளிதில் தூய்மை படுத்தும் வண்ணம் அமைக்க வேண்டும்.
  12. ஒவ்வொரு கால்நடைக்கும்மான இடைவெளி 5- 10 ச.மீட்டர் அளவில் ஒதுக்கீட செய்ய வேண்டும்.
  13. வெயில் காலங்களில் முறையான நிழல் மற்றும் குளிர்ந்த நீரை கால்நடைகளுக்கு அளிக்க வேண்டும்.
  14. குளிர்காலத்தில் இரவு நேரத்திலும், மழையிலும் கால்நடைகளை வீட்டிற்குள் பராமரிக்க வேண்டும்.
  15. நாள்தோறும் கால்நடைகளுக்கு தனித்தனி  கிடைப்படி ஓதுக்க வேண்டும்.
  16. கூடாரம் சுகாதார முறையில் பராமரிக்க வேண்டும்.
  17. வெளிப்புற ஒட்டுண்ணிகளான (பேன், ஈக்கள் ) இவற்றிலிருந்து காக்க சுவர்களுக்கு மாலத்தியான அல்லது காப்பர் சல்பேட் தெளிக்க வேண்டும்.
  18. கால்நடைகளின் சிறுநீர் சிறு குழிகளில் சேகரிக்கப்பட்டு பின் அதை பாசனக் கால்வாயில் சேர்க்க வேண்டும்.
  19. கால்நடைகளின் சாணம் மற்றும் சிறுநீரை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். சாண எரிவாயு கலனை சிறந்த முறையில் அமைக்க வேண்டும். சாண எரிவாயு கலன் என்பது சாணத்துடன் பண்ணை கழிவுகள் கால்நடை கழிவுகளை சேர்த்து தயாரிப்பதாகும்.
  20. கால்நடைகளுக்குத் தேவையான இடைவெளி ஒதுக்க வேண்டும்.

பால் விற்பனை :

  • பால் கறந்த உடனடியாக அதை விற்பனை செய்ய வேண்டும். பால் கறப்பதற்கும் அதை விறபனை செய்யவதற்கும் இடையே மிக குறைந்தபட்ச நேரமே இருக்க வேண்டும்.
  • பால் கறப்பதற்காக பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் மிகவும் தூய்மையானதாக பயன்படுத்த வேண்டும்.
  • பால் கறப்பதற்காக பயன்படுத்தப்படும் வாளி/கேன் / பாத்திரங்கள் நன்றாக சலவைத்தூள் கொண்டு தேய்த்து மற்றும் இறுதியாக குளோரைடு நீர்மம் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
  • பாலை எடுத்துச் செல்லும்போது அதிகப்படியான குலுங்கலை தவிர்க்க வேண்டும்.
  • பாலை மற்றொரு ஊருக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்லும் போது அதை ஒரு நாள் முழுவதும் குளிரூட்டியில் பதப்படுத்த வேண்டும்.
Facebook Messenger Twitter WhatsApp

Leave a Comment

Exit mobile version