Textile Business

மேட் தொழில் செய்யலாம் வாங்க

லாபம் தரக்கூடிய  மேட் தொழில் செய்வது எப்படி

வணக்கம் நண்பர்களே இந்தப் பதிவில் என்ன பாக்க போகிறோம் என்றால் வீட்டிலிருந்தபடியே தரையில் விரிக்க கூடிய மேட் தொழில் எப்படி செய்யலாம் என்றுதான் வாங்க முழுமையாக பார்க்கலாம்

மேட்டின் பயன்பாடு அதிகமாகவே உள்ளது வீடு கடை மற்றும் அலுவலகங்கள் அனைத்திற்குமே மிகவும் தேவையாக உள்ளது அதனால் மேட் விற்பனை தொழிலை செய்து அதிக லாபம் பெறலாம் விற்பனை செய்வதும் மிகவும் எளிது

மேட் மொத்த விலைக்கு பத்து ரூபாய் முதல் உங்களுக்கு கிடைக்கும் ஒரு கட்டில் மொத்தம் 50 மேடுகள் இருக்கும் நீங்கள் மேட் தொழில் செய்ய உங்களுக்கு ஆகும் முதலீடு 500 ரூபாய் மட்டுமே.

இப்போது மேட்டின் கரங்களையும் விலைகளையும் பார்க்கலாம்

  • டெக்கான் மேட் விலை 10ரூபாய்
  • 22 சைஸ் மேட் இதன் விலை 13 ரூபாய்
  • 27 சைஸ் மேட் இதன் விலை 17 ரூபாய்
  • டர்கி மேட் விலை 20 ரூபாய்
  • பைப்பிங் மேட் 23 ரூபாய்
  • ரவுண்ட் மேட் 27 ரூபாய்
  • ஓவல் மேட் 27 ரூபாய்
  • சந்திரமுகி மேட் 35 ரூபாய்
  • அடுத்தது விரி மேட்
  • ரெண்டுக்கு மூணு 50 ரூபாய்
  • ரெண்டுக்கு ஆறு 75 ரூபாய்
  • 3*6- 95 ரூபாய்
  • 4*6 -125 ரூபாய்

 இந்த தொழிலை யாரெல்லாம் செய்யலாம்

இந்த தொழில் செய்வதற்கு வயது தடையில்லை யார் வேண்டுமானாலும் செய்யலாம் நீங்கள் தொழில் செய்ய முதலில் கவனிக்க வேண்டியது எங்கு மிகக்குறைந்த விலையில் மொத்தமாக கிடைக்கும் என்பதுதான் முதலில் மொத்த விலை கடையை நாடவும் அங்கிருந்தும் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம் அல்லது வீட்டிலிருந்து மேட் தயாரிப்பாளரிடம் மொத்தமாக வாங்கிக் கொள்ளலாம்

தயாரிப்பாளரிடம் இருந்து மொத்தமாக வாங்கும்போது உங்களுக்கு இன்னும் ஒன்று அல்லது இரண்டு ரூபாய் குறைவாகவே கிடைக்கும்

 எங்கெல்லாம் விற்பனை செய்யலாம்

இப்போது நிறைய சமூக ஊடகங்கள் உள்ளன நீங்கள் முகநூல் மூலம் குழுமம் அமைத்து அல்லது வாட்ஸ்அப் டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி விற்பனை செய்யலாம் அப்படி இல்லை என்றால் உங்கள் வீட்டின் அருகில் உள்ள நண்பர்கள் மூலமாகவும் விற்பனை செய்யலாம்

லாபம் பார்ப்பது எப்படி

நீங்கள் வாங்கும் விலையைவிட ஒரு 5 அல்லது பத்து ரூபாய் லாபம் வைத்து விற்கலாம் நீங்கள் இந்த மேட் சில்லறை விலைக்கு வாங்க சென்றாள் குறைந்தது முப்பது ரூபாய் வரை கொடுக்க வேண்டியிருக்கும் நீங்கள் விற்கும்போது 20 ரூபாய் அல்லது 25 ரூபாய் வரை விற்கலாம் அப்படி நீங்கள் 50 மேட் விற்கும்போது உங்களுக்கு 750 ரூபாய் வரை லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது கிடைத்த லாபத்தை வைத்து இன்னும் உங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ளலாம்.

 

மீண்டும்  நல்ல ஒரு தொழில் பதிவில் சந்திப்போம் 

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker