Site icon TAMIL BUSINESS THAGAVAL

குளியல் சோப்பு தயாரித்து நல்ல லாபம் பெறலாம் வாங்க

குளியல் சோப்பு தயாரிக்கும் முறை  பற்றி இப்போது தெளிவாக  பார்க்கலாம்
வாங்க !
  அனைவரும் அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் குளியல் சோப்புகளை இயற்கையான முறையில் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் அதிக லாபம் பெற முடியும்.
இதற்கு முதலீடு என்பது மிகவும்  குறைந்த அளவே, தேவைப்படும்  வீட்டிலிருந்தே தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு இது மிகவும்  ஏற்ற தொழிலாகும்.
இனி கற்றாழை சோப்பு எப்படி தயாரிப்பது என்பது பற்றி காண்போம்.
  • தேவையான பொருள்கள் :
  •  
  • காஸ்டிக் சோடா – 100 கிராம்
  •  
  • தண்ணீர் – 300 மி.லி
  •  
  • கற்றாழை – தேவையான அளவு
  •  
  •  சுத்தமான தேங்காய் எண்ணெய் – 600 மி.லி
  •  
  •  வாசனை திரவியம் – தேவையான அளவு
தயாரிக்கும் முறை
 முதலில் ஒரு அலுமினிய பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதனுடன் காஸ்டிக் சோடாவை தேவையான அளவு சேர்த்து சிறிது நேரம் நன்கு கலக்க வேண்டும்.
 
குறிப்பு காஸ்டிக் சோடாவை தண்ணீருடன் சேர்க்கும் போது கவனமாக கையாள வேண்டும்.
 அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து மாவு பதம் வரும் வரை கிளற வேண்டும்.
 பின்னர் அதில் கற்றாழை மற்றும் வாசனை திரவியம் சேர்த்து கலக்க வேண்டும். பின்பு கடைசியாக அச்சில் ஊற்றி காய வைக்க வேண்டும். (இதில் கற்றாழைக்கு பதிலாக பப்பாளி, வேம்பு, மஞ்சள் ரோஜா பன்னிர் போன்றவைகளையும் பயன்படுத்தலாம்.)
சோப்பு காய்ந்ததும் ஒரு மாதம் கழித்து பயன்படுத்துவதற்கு தயார் ஆகி விடும். அதனை பேக்கிங் செய்து  உங்கள் வசதிக்கு ஏற்றாற்போல் மொத்தமாகவோ அல்லது சில்லறையாகவோ விற்பனை செய்வதன் மூலம் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும்.
வீட்டில் இருந்து கொண்டு சுய தொழில்கள் செய்து அதிக லாபம் பெறுவது எப்படி என்பதை அறிந்து கொள்ள நமது பக்கத்தை பின் தொடரவும் .
அடுத்து  ஒரு நல்ல பதிவில் சந்திக்கிறேன் நன்றி .
Exit mobile version