Site icon TAMIL BUSINESS THAGAVAL

இயற்கை முறை வெங்காயம் சாகுபடி தொழில் onion business

                                             

வெங்காயம் உங்க எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கும் வெங்காயம் அப்படிங்கறது நம் அன்றாட வாழ்க்கையில் மிகவும் தேவையான ஒன்று அது இல்லாம எதுவும் இல்ல அப்படி என்கிற அளவுக்கு கூட சொல்லலாம்

👉 வெங்காய அப்படிங்கறது சமையலுக்கு தினமும் தேவைப்படக்கூடிய ஒன்றும் மருத்துவ குணம் மிக்க உள்ளது இது இல்லாம நமக்கு உணவு   தயார் செய்ய முடியாது அந்த அளவுக்கு வெங்காயதின் வரவேற்பு அதிகமாக இருக்கும்.

இப்ப சொல்லுங்க!!!வெங்காயம் வளர்த்து அறுவடை செய்வதன் மூலமாக நமக்கு எண்ணிலடங்காத லாபம் கிடைக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

        இப்போ இந்த வெங்காயம் இவ்வாறு பயிர் செய்ய வேண்டும் எவ்வாறு வளர்க்க வேண்டும் எவ்வாறு அறுவடை செய்து விற்பனை செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்!!!!!

வெங்காயம் இரண்டு வகை உள்ளது:

  1. சின்ன வெங்காயம்

2. பெரிய வெங்காயம்

 வெங்காயம் வளர்ப்பு முறை;

👉குறுகிய காலத்தில் மகசூல் கொடுக்கும் பயிர்களில் கீரைகளுக்கு அடுத்த இடத்தில் இருப்பது வெங்காயம். வெங்காய சாகுபடி செய்வதற்கு நல்ல மண் வளம் போதுமானது.

👉ஏக்கருக்கு 5 முதல் 6 கிலோ விதைகள் தேவைப்படும். ஒரு கிலோ விதைக்கு 400 கிராம் அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தை ஆறிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து 30 நிமிடம் நிழலில் உலர்த்தி, நாற்றங்காலில் விதைக்க வேண்டும்.

👉நடவுக்கு முன்பு பார் பாத்திகளின் இருபுறமும் அடி உரமாக, ஏக்கருக்கு 30 கிலோ தழைச்சத்தும், 60 கிலோ மணிச்சத்தும், 30 கிலோ சாம்பல் சத்தும் இட வேண்டும். 

👉பின்னர் நடவு செய்த 30 நாட்கள் கழித்து, 30 கிலோ தழைச் சத்தினை மேலுரமாக இட்டு மண்ணை அணைக்க வேண்டும்.

👉விதை வெங்காயம் நடவு செய்த 30 நாள் கழித்து களை எடுத்து மேலுரமிட்டு மண் அணைத்து நீர் பாய்ச்ச வேண்டும். 

👉பின்னர் தேவைக்கு ஏற்ப களை எடுத்து நிலத்தை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும்.

👉வயலில் வெங்காயத்தின் இலைகள் 75 சதவீதம் காய்ந்து விட்டால் பயிர் முதிர்ச்சி அடைந்திருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம். 

👉அறுவடைக்கு 7 நாட்கள் முன்பு நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

நோய் தடுப்பு முறை:

👉 வெங்காயத்தை பயிர் செஞ்சு வளக்கறது மட்டும் பெருசில்ல நோய் அண்டாமல் பாதுகாக்கிறது ரொம்ப முக்கியம்

👉 இந்தப் பயிரில் சார் புரிஞ்சி போச்சி அதிகமாக காணப்படும். இதை தவிர்க்க மோனோகுரோட்டோபாஸ் மருந்தை ஒரு சதவீதம் தெளிக்க வேண்டும். மேலும் இலைப்புள்ளி நோய் பரவலாக காணப்படும். அதை கட்டுப்படுத்த இன்டோபில் எம் 45 என்ற மருந்தை 2 சதவீதம், தெளிக்க வேண்டும்.

அறுவடை :

👉 வெங்காயம் நடவு செய்து 140 நாட்கள் அல்லது 150 நாட்களில்  அறுவடை செய்யலாம்.

👉 ஏக்கருக்கு 6 லிருந்து 7 வரை மகசூல் கிடைக்கும்.

விற்பனை:

👉 வெங்காயத்தை சாகுபடி செய்து மார்க்கெட் மற்றும் தொழில் நிலையங்களில் விற்பனை செய்து நல்ல லாபம் பெறலாம்

👉 வெங்காயத்தில் இன்னொரு லாபம் பெறுவதற்கு வெங்காய எண்ணெய் உற்பத்தி செய்து இன்னும் இரட்டிப்பாக லாபம் பெறலாம்

Exit mobile version