TOP 5 DEALERSHIP BUSINESS IDEAS IN TAMIL
வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது அதிக வருமானம் தரக்கூடிய TOP 5 DEALERSHIP BUSINESS IDEAS IN TAMIL டீலர்ஷிப் தொழில்களைப் பற்றி தான்.
எந்த ஒரு தொழில் செய்தாலும் முதலில் நன்கு ஆலோசித்து ஒன்றுக்கு பலமுறை இது நமக்கு செய்ய முடியுமா என்று யோசனை செய்து செய்யவும் நாங்கள் உங்களுக்காக பல தொழில் வாய்ப்புகளுக்கான உந்துதலை தருகின்றோம்.
Table of Contents
பிரிட்டானியா டீலர்ஷிப்
பிரிட்டானியா நிறுவனத்தின் உற்பத்தி ஆகக்கூடிய பிஸ்கட் மற்றும் நியூட்ரி சாட்டிலைட் இவற்றை மொத்தமாக வாங்கி கடைகளுக்கு விற்பனை செய்து லாபம் பெறலாம்.
இதற்கு தேவையான தகுதிகள்.
குறைந்தது உங்களிடம் 1500Sq.Ft முதல் 2000Sq.Ft உள்ள குடோன் தேவை.
3 முதல் 6 வரை வேலை ஆட்கள் இருக்க வேண்டும்.
பொருட்களை டெலிவரி செய்வதற்கு உங்களிடம் ஒரு டூவீலர் மற்றும் போர் வீலர் இருக்க வேண்டும்.
பிரிட்டானியா நிறுவனத்தின் டீலர்ஷிப் எடுப்பதற்கு முன்பணமாக ரூபாய் இரண்டு லட்சம் தேவைப்படும்.
பிரிட்டானியா நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதள முகவரி கொடுத்துள்ளோம் அதில் சென்றேன் நீங்கள் டீலர்ஷிப் அப்ளை செய்து கொள்ளலாம்.
ராம்கோ சிமெண்ட் டீலர்ஷிப்
இப்போது சிமெண்டின் தேவை அதிகமாகவே உள்ளது வீடு கட்டுவதற்கு மட்டுமல்லாமல் பல நிறுவனங்கள் அரசு கட்டிடங்கள் போன்றவை அதிகமாக கட்டப்படுகின்றன இதற்கான அத்தியவசிய தேவையாக சிமெண்டும் உள்ளது.
அதனால் சிமெண்ட் டீலர்ஷிப் வாங்கினாள் கணிசமான ஒரு தொகையை இலாபமாக ஈட்டமுடியும் இதற்கு என்னென்ன தேவை என்பதை பார்க்கலாம் வாருங்கள்.
உங்களிடம் குறைந்தது 500 Sq.Ft இடம் இருக்க வேண்டும் அடுத்ததாக உங்கள் நிறுவனத்தை உங்கள் முனிசிபாலிட்டி ஆபீஸில் பதிவு செய்து அதற்கான பதிவு சான்றிதழ் வாங்கி வைத்திருக்க வேண்டும்.
அடுத்ததாக ஜிஎஸ்டி பதிவு செய்திருக்க வேண்டும்
குறைந்தது உங்களுடைய வங்கி கணக்கில் ஆறுமாத பண வர்த்தனை செய்ததற்கான நகலும் இருக்கவேண்டும்.
இவர்களது டீலர்ஷிப் எடுப்பதற்கு குறைந்தது ஒன்றரை லட்சம் முதல் 2 லட்சம் வரை முன் பணம் தேவைப்படும்.
நீங்க டீலர்ஷிப் எடுக்கலாம் நினைச்சீங்க தான் இவர்களது ஆபீஸில் இணையதளமான ராம்கோ சிமெண்ட் டாட் இன் சென்று இவர்களது மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது தொலைபேசி என் மூலமாக தொடர்பு கொண்டு பேசி முழு தகவல்களையும் பெற்றுக் கொள்ளலாம்.
ஆவின் மில்க் டீலர்ஷிப்
ஆவின் மில்க் அரசால் நடத்தக்கூடிய நிறுவனம்
இங்கு ஆவின் தயாரிக்கக்கூடிய பால் மற்றும் தயிர் மோர் நெய் பால் புரோடக்ட் விற்பனை செய்வதன் மூலம் நல்ல லாபம் பெறலாம்.
ஆவின் நிறுவனத்தை டீலர்ஷிப் எடுப்பதற்கு குறைந்தது உங்களிடம் 120 Sq.Ft அளவு இடம் தேவை.
விண்ணப்பிப்பதற்கு உங்களது வயது குறைந்தது 21 நிரம்பி இருக்க வேண்டும்.
உங்களிடம் குறைந்த அளவு இரண்டு வேலையாட்கள் ஆவது இருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள் ஆதார் கார்ட் பேன் கார்ட் கடையின் விலாச சான்றிதழ் இருக்க வேண்டும்
ஆவின் டீலர்ஷிப் எடுப்பதற்கு குறைந்தது 25 ஆயிரம் முன் பணம் தேவைப்படும்.
இந்த ஆவின் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தை கிளிக் செய்து நேரடியாக அங்கு சென்று நீங்கள் அப்ளை செய்து கொள்ளலாம்.
ஏசியன் பெயிண்ட் டீலர்ஷிப்
ஏசியன் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யக்கூடிய கடை டீலர்ஷிப் இதற்கு தேவையான விதி முறைகளைப் பார்ப்போம்.
குறைந்தது உங்களிடம் 500 Sq.Ft முதல் 1000 Sq.Ft வரை உள்ள கடை தேவை.
அடுத்ததாக கலர் மிக்ஸ் செய்யக்கூடிய மிஷின் தேவை.
கலர் மிக்சிங் செய்யக்கூடிய மிஷினில் இணைப்பதற்காக ஒரு கம்ப்யூட்டரும் தேவை.
டிரைவிங் லைசென்ஸ் ஜிஎஸ்டி கடையின் சான்றிதழ் இருந்தால் போதும்.
இந்த டீலர்ஷிப் எடுப்பதற்கான முன்பணம் 3 லட்சம் முதல் 4 லட்சம் வரை தேவைப்படும்.
இவர்களது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று இவர்களது மின்னஞ்சல் வாயிலாகவும் அல்லது தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு டீலர்ஷிப் எடுக்கலாம்.
சுகுணா சிக்கன் டீலர்ஷிப்
சுகுணா சிக்கன் நிறுவனம் மிகவும் தமிழ்நாட்டில் பிரபலம் இந்த நிறுவனத்தில் சிக்கன் மற்றும் மீன் விற்பனை செய்து நல்ல லாபம் பெறலாம்.
இதற்கு தேவையான விதிமுறைகள் குறைந்தது 300 Sq.Ft முதல் 400 Sq.Ft கடை தேவை.
3 பீஸ் எலக்ட்ரிசிட்டி கரண்ட் அந்த கடையில் இருக்க வேண்டும்.
FSSAI சான்றிதழ் மிகவும் முக்கியம் மற்றும் ஜிஎஸ்டி UDYOG ஆதார் கட்டாயம் தேவை.
இவர்களது டீலர்ஷிப் எடுப்பதற்கு முன்பணம் மூன்றரை இலட்சம் தேவைப்படும்.
இவர்களது ஆபீஷியல் இணையதளத்தில் லிங்க் கொடுத்துள்ளோம் இதில் சென்று நீங்கள் அவர்களது தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் அல்லது அதிகாரபூர்வ முகவரியில் நேரடியாக சென்றும் டீலர்ஷிப் எடுத்துக்கொள்ளலாம்.
இதுவரை அதிக வருமானம் தரக்கூடிய ஐந்து டீலர்ஷிப் தொழில்களைப் பற்றி இந்த பதிவில் பார்த்து இருப்போம் இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கின்றேன் உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் கமெண்ட் வாயிலாக தெரிவிக்கவும் இதேபோல் உங்கள் நண்பர்கள் யாராவது டீலர்ஷிப் தொழில் செய்ய விரும்பினால் அவர்களுக்கு கூடுதல் தகவல்கள் அறிந்து கொள்ள நமது இந்த இணைய தளத்தை ஷேர் செய்யவும்.
மேலும் இது போன்ற தொழில் தகவல்களை தினந்தோறும் பெற்றிட நமது இணையதளத்தை சப்ஸ்கிரிபே செய்து கொள்ளவும்.