லாபம் பெறுவதற்கு வாழை மரம் வளர்ப்பு தொழில் Banana Tree Business
வாழையடி வாழையாக லாபம் பெறுவதற்கு வாழை மரம் வளர்ப்பு தொழில் மிகவும் வளர்ந்து வருகிறது
வாழை மரம் வளர்ப்பதின் மூலம் ஒன்று அல்ல இரண்டு அல்ல அதற்கும் மேலாக வாழைமரம் லாபம் தருவதற்கு சிறந்த ஒரு தொழிலாக இருக்கிறது ஏனெனில் வாழைமரம் ஆனது
Table of Contents
வாழை மரம்
வாழை இலை
வாழைப்பழம்
வாழைப்பூ
வாழைத்தண்டு
என வாழை மரம் என்ற ஒரே ஒரு இலக்கை நாம் எண்ணிப் பார்க்காத அளவிற்கு உச்சத்தை தொட கூடிய ஒரு சிறந்த அதிகம் அதிகம் லாபம் தரக்கூடிய ஆரோக்கியமான எளிமையான ஒரு தொழில்
வாழைமரம் வளர்ப்பு
👉 வாழை மரத்தை பொறுத்த அளவு ஒரு குறிப்பிட்ட சதுரடி நிலம் இருந்தாலே போதுமானது அதில் ஆரோக்கியமான மணல் இருப்பது மிகவும் அவசியமானது ஏனெனில் மண்ணில் தரமில்லை என்றால் வாழைமரம் பிடிமானமாக வளர்வதற்கு மிகவும் சிரமமாக இருக்கும்
👉 ஆகையால் தரமான நிறத்தை தேர்வு செய்வது மிகவும் அவசியம்
வலர்ப்பதுக்கு யேர்ட்ட வழி முறைகள்:
👉நிலம் இரகங்கள் இடைவெளி பயிர் எண்ணிக்கை எக்டர் தோட்டக்கால் நிலம் ரோபாஸ்டா, நேந்திரன் 1.8 x 1.8 மீ 3086 👉குள்ளவாழை 1.5 x 1.5 மீ 4444 நஞ்சை நிலம் பூவன், மொந்தன், ரஸ்தாளி, நெய்வண்ணன், நெய்பூவன் 2.1 x 2.1 மீ 2267 மலைப்பகுதி விருப்பாட்சி, சிறுமலை, நமரை மற்றும் லாடன் 3.6 x 3.6 மீ 750 (கலப்பு பயிர்)
👉ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை ஒரு பருவம், செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை ஒரு பருவம், டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை ஒரு பருவம் என வாழைக்கு மூன்று பருவங்கள். ஜூன் மாதத்தில் நடவு செய்த வாழை நல்ல வீரியத்துடன் வேகமாக வளரும். அக்டோபர் மாதத்தில் பயிர் செய்த வாழை மெதுவாகவும், ஒரே சீராகவும் வளரும்.
👉நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் உகந்தது. காரமண் மற்றும் உப்பு மண் உகந்ததல்ல. 6 – 7.5 கார அமிலத் தன்மையுடன் உள்ள இரும்பொறை மண்ணில் வாழை நன்றாக வளரும்.
👉இதற்கு எந்த விதமான உழவு முறையும் தேவையில்லை. லேசாக மண்ணைப் பறித்து, அதன் மேல் நேர்த்தி செய்த கன்றுகளை நட்டு மண் அணைக்க வேண்டும்.
வாழை மரம் நடுவதுபற்றி பார்ப்போம்:
👉2 முதல் 4 முறை நன்கு உழ வேண்டும்.
👉மண் வெட்டியால் ஒரு அடி ஆழத்திற்குக் கொத்திவிட வேண்டும்.
👉வனப்பகுதியை சரி செய்து சமஉயர வரப்பு அமைக்க வேண்டும்.
👉பயிரிடுவதற்கு முன், பசுந்தாள் உரப்பயிர்களான தக்கைப்பூண்டு, தட்டைப்பயிறு வகைகளை பயிர் செய்து, நிலத்திலேயே உழுது விடவேண்டும்.
👉கலப்பை கொண்டு மண்கட்டிகளை உடைத்து நிலத்தைப் பண்படுத்த வேண்டும்.
👉நிலத்தைத் தயார் செய்யும் போது ஒரு எக்டருக்கு 50 டன் எருவை அடியுரமாக இட்டு, மண்ணுடன் கலக்க வேண்டும்
👉வாழை சாகுபடியில் 4 விதமான நடவு முறைகள் உள்ளன.
ஒற்றை வரிசை முறை
இரட்டை வரிசை முறை
சதுர நடவு முறை
முக்கோண வடிவ முறை
👉 வழை மரம் நடுவதற்கு குறைந்தது 5 அடி அளவிற்கு குழிகளை ஆழமாகத் தோண்ட வேண்டும் அதில் தண்டுகளை நட்டு உடன் அதில் மண்ணை அணை போல் சரியாக வாழை கன்றை சுற்றி அமைக்க வேண்டும்.
👉அரை வட்ட வடிவ பாத்தியை மரத்திற்குக் கீழே அதாவது மரத்தைச் சுற்றி அமைக்க வேண்டும். அதில் 315 கிராம் (40:30:40) தழை, மணி, சாம்பல் சத்தைக் கலந்து இட வேண்டும். பின் 130 கிராம் மியூரோட் சாம்பல் சத்தை அக்டோபர், ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதத்தில் இட வேண்டும். அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போ பாக்டீரியா உயிர் உரத்தை 20 கி/மரம் என்ற அளவிற்கு 2-வது மற்றும் 4வது மாதத்தில் அனைத்து இரகத்திற்கும் இட வேண்டும்.
👉திசு வளர்ப்பு வாழைக்கு 50 சதவிகித உரம் கூடுதலாக நடவு செய்த 2,4,6 மற்றும் 8-வது மாதங்களில் இடவேண்டும்.
👉நடவு செய்து ஒரு மாதம் கழித்து, ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீருக்கு 20 லிட்டர் வடிகட்டிய ஜீவாமிர்தம் என்ற விகிதத்தில் கலந்து வாழை மற்றும் ஊடுபயிர்களின் மேல் தெளிக்க வேண்டும். இரண்டு மாதங்கள் கழித்து 200 லிட்டர் தண்ணீருக்கு 13 லிட்டர் வடிகட்டிய ஜீவாமிர்தம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். மூன்று மாதங்கள் கழித்து 200 லிட்டர் தண்ணீருக்கு 20 லிட்டர் வடிகட்டிய ஜீவாமிர்தம் என்ற அளவிலும், நான்கு மாதங்கள் கழித்து 200 லிட்டர் தண்ணீருக்கு 6 லிட்டர் புளித்த மோர் என்ற அளவிலும் கலந்து தெளிக்க வேண்டும்.
👉 வாழைக் கன்றை நட்டு குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு தண்ணீரை செலுத்திய பிறகு வாழை மரம் பூ பூத்து வாழைத்தார் விடும் சமயத்தில் ஒரு அழுத்தமான உயரமான கம்பு கம்பை வைத்து முட்டுக் கொடுக்க வேண்டும் இல்லை எனில் அது சாய்ந்துவிடும்.
👉வாழைத்தார் விட்டு வாழைக்காய் ஆக மாறும் சமயத்தில் வாழை மரமானது விற்பனைக்கு தயாராகி விட்டது என்று அர்த்தம். பிறகு வாழை மரத்தை வாழை இலை வாழைக்காய் வாழைப்பழம் அல்லது வாழைத்தண்டு களாகவோ விற்பனை செய்வதற்கு ஏற்றவாறு அமைந்துவிடும்.
👉பிறகு நீங்கள் அனைத்தையும் தனித்தனியாக விற்பனை செய்யலாம் அல்லது கல்யாண வீடுகளிலோ அல்லது விழாக்களில் வாழை மரத்தை முழுவதுமாக விற்கலாம் எப்படியும் மாதத்திற்கு 50 ஆயிரத்துக்கு மேல லாபம் பெறுவதற்கு வாழைமரம் ஆனது பல்வகையில் நமக்கு அதாவது சுயதொழில் செய்பவர்களுக்கு ஏற்றதாக அமைகிறது.