Textile Business
நைட்டி தொழில் செய்து லாபம் பெறுவது எப்படி
Table of Contents
லாபம் தரும் நைட்டி தொழில்
வணக்கம் நண்பர்களே,
இன்று நமது தொழில் தகவல் பகுதியில் நாம் காண இருப்பது நைட்டி தொழில் செய்து லாபம் பெறுவது எப்படி என்பது பற்றிய தகவல்களை காண்போம்.
பெண்கள் அணியும் ஆடைகளில் முக்கிய பங்கு வகிப்பது நைட்டி ஆடைகள். இல்லத்தரிகள் முதல் வேலைக்குச் செல்லும் பெண்களும் தங்களது பணி முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் விரும்பி அணியும் ஆடையும் இந்த நைட்டிதான்.
இந்த நைட்டி ஆடைகளை எங்கு, எப்படி வாங்குவது, வீட்டில் இருக்கும் பெண்கள் கூட ஒரு சிறிய முதலீட்டில் இதை எப்படி தொழிலாக செய்யலாம் என்பது பற்றி இனி காண்போம்.
நைட்டி ஆடைகள் தேர்வு செய்யும் முறை :
நைட்டிகளில் பல மாடல்கள் உள்ளன. இதில் பெண்கள் பொதுவாக விரும்பும் மாடல்கள் மற்றும் நமது பகுதியில் உள்ளவர்கள், நாம் விற்பனை செய்யும் நைட்டிகளை வாங்கும் பெண்கள் விரும்பும் மாடல்கள் போன்றவற்றை முதலில் தெரிந்து கொண்டு அதற்கேற்றார்போல் நைட்டிகளை நாம் தேர்வு செய்வதன் மூலம் எளிதில் விற்பனை செய்வதற்கு வழிவகை செய்யும்.
நைட்டி ஆடைகள் எங்கு, எப்படி வாங்கலாம் :
நைட்டி ஆடைகளை உற்பத்தி செய்யும் இடங்கள் மற்றும் மொத்த விற்பனை கடைகள் ஆகியவற்றின் மூலம் வாங்கும் பொழுது குறைந்த விலையில் கிடைப்பதோடு, எண்ணற்ற மாடல்கள் மற்றும் டிசைன்கள் இருப்பதால் நாம் வாங்குவதற்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.
நைட்டிகளை வாங்கும் போது முதலில் நாம் நேரடியாக சென்று தான் பார்த்து வாங்க வேண்டும். போன் மூலமாக அனைத்து தகவல்களை கேட்பதும், போன் செய்து ஆர்டர் கொடுப்பது சரியான முறையாக இருக்காது .
நாம் நேரடியாகச் சென்று நைட்டிகளை பார்த்து,அதன் தன்மையை தொட்டுப்பார்த்து, துணி வகை மற்றும் அதன் தரம் முதலியவற்றை நாம் தெரிந்து கொண்டு வாங்குவது தான் சிறந்த முறை . மேலும் நாம் கொள்முதல் செய்யும் கடைக்காரரிடம் நமது கருத்துக்களை கூறவும் , அவர் தரும் தகவல்களை கேட்டு தெரிந்து கொள்ளவும் முடியும் . இதன் மூலம் நமக்கும் , அவருக்கும் இடையே ஒரு புரிதல் ஏற்படும் . அதன் பிறகு நமக்கு தேவையான நைட்டி ஆடைகளை நாம் வீட்டில் இருந்து கொண்டே போன் மூலமாக அதன் மாடல்களை சொல்லிக் கூட நாம் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம்.
விற்பனை செய்யும் முறை :
நாம் விற்பனை செய்யும் நைட்டிகள் விலை குறைவாக இருப்பதுடன் நல்ல தரமானதாகவும் இருந்தால் வாங்கும் அனைவரையும் வெகுவாக கவர்ந்து விடும். எனவே நாம் தரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
மேலும் ஒரு நைட்டி வாங்கினாலும் நாம் அவர்களிடம் இனியைாக பேச வேண்டும் . துணியின் தன்மை மற்றும் அதன் தரம் குறித்து அவர்களிடம் எடுத்துக்கூற வேண்டும் . மேலும் அதன் நிறம் , அமைப்பு ஆகியற்றையும் அவர்கள் நன்கு பார்க்கும் படி நாம் காட்சிப்படுத்த வேண்டும் . இதன் மூலம் அவர்களுக்கு நம் மீது ஒரு நட்புணர்வும், வாங்க வேண்டும் என்ற ஒரு ஆவலும் ஏற்படும் .
மேலும் அவர்கள் நம்மைப்பற்றியும் நமது செயல்பாடுகள் பற்றியும் மற்றவர்களிடம் சிறப்பாக கூறுவார்கள் . இதன் மூலம் நமக்கு இன்னும் பல வாடிக்கையாளர்கள் கிடைப்பதற்கும் வழிவகை செய்யும்.
நண்பர்களே , இந்த தொழில் தகவல் பகுதியில் குறைந்த முதலீட்டில் வீட்டில் இருக்கும் பெண்களும் நைட்டி தொழில் செய்து நல்தொரு வருமான பார்ப்பதற்கு உண்டான ஒரு சில முக்கிய குறிப்புகளை தொகுத்து தந்துள்ளேன் . தங்களுக்கு பயன் தரும் வகையில் இருக்கும் என நினைக்கின்றேன்.
மேலும் இதேபோல் மற்றுமொரு தொழில் தகவல் பகுதியில் உங்களைச் சந்திக்கின்றேன்.
வாழ்த்துக்களுடன், உங்கள் நண்பன்.